காதலர்களை தூக்கிலிட்ட பெற்றோர்!
முஷாபர்பூர் (உத்தரப் பிரதேசம்):
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதலித்த குற்றத்திற்காக, பெற்றோர்களே காதலர்கள் 2 பேரையும் தூக்கிலிட்டுக்கொன்றுள்ளனர்.
இவர்களுடைய காதல் விஷயம் 2 பேரின் பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. ஆனால் வெவ்வேறு ஜாதியினரானஇரு குடும்பங்களும் இணைவது சாத்தியமில்லை என்று கூறி காதலர்களைப் பிரிக்க முயன்றனர்.
ஆனால், அதை காதலர்கள் இருவரும் ஏற்கவில்லை.
முடிவில், காதலித்த குற்றத்திற்காக, விஷாலுக்கும் சோனுவுக்கும் "தூக்குத் தண்டனை" அளித்து விடுவது என்று 2குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.
அலிப்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு காதலர்கள் 2 பேரும் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கில் தொங்க விட்டுக்கொன்றனர்.
பின்னர், இறந்து போன 2 உடல்களையும் "பத்திரமாக" எடுத்துக் கொண்டு வந்து, எரித்தும் விட்டனர்.
இது தொடர்பாக யாருமே போலீசில் புகார் செய்யவில்லை என்பது தான் ஆச்சரியமான விஷயம். ஜாதிக்கு அந்தஊர் கொடுக்கும் முக்கியத்துவம் தான் இதற்குக் காரணம்.
சில உள்ளூர் செய்தித் தாள்கள் மூலம் விஷயம் வெளியே தெரிய வந்தது. இதையடுத்து விஷாலின் சகோதரரையும்சோனுவின் பெற்றோரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்தக் கொலைக்கு அந்த ஊர்க்காரர்களின் பலத்த "ஆசி"யும் இருந்துள்ளது. கொலையைநூற்றுக்காணக்கானவர்கள் நேரில் பார்த்துள்ளனர். இதில் சில கிராமத்தினரை விசாரணைக்காக போலீசார்அழைத்துச் சென்றுள்ளனர்.
காதலர்கள் 2 பேரையும் தூக்கிலிடும் விஷயத்தில் ஒற்றுமையுடன் செயல்பட்ட அவர்களின் பெற்றோர்களும்,ஊர்க்காரர்களும், அந்தக் காதலர்களை இணைத்து வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
வென்றது ஜாதி! வீழ்ந்தது மானுடம்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications