நிதியுதவி வழங்கினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தான் கைது செய்யப்பட்டபோது உயிர் நீத்த 5 திமுக தொண்டர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிதியைதிமுக தலைவர் கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட அதிர்ச்சி தாளாமல் 66 திமுகவினர் உயிர் நீத்தனர். இவர்களின்குடும்பத்திற்கு திமுக சார்பில் தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி உயிர்நீத்த திமுகவினரின் குடும்பத்தினருக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் இளைஞர்அணி பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சமீப நாட்களாக நிதியுதவி வழங்கி வந்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் 5 திமுகவினரின் குடும்பத்துக்குகருணாநிதியே தனது கையால் நிதியுதவி வழங்கினார். அப்போது அவரது கண்கள் கலங்கி இருந்தன.












Click it and Unblock the Notifications