உடைக்கப்படும் விலங்குகள், சங்கிலிகள்
ஏர்வாடி:
மனநல காப்பகங்களில் இருக்கும் நோயாளிகளுக்கு பூட்டப்பட்டிருக்கும் விலங்குளை அகற்ற வேண்டும் எனராமநாதபுரம் ஆட்சி தலைவர் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களுக்கு பூட்டப்பட்டிருந்த விலங்குகள்அகற்றப்பட்டன.
பாஷா மனநல காப்பகம் என்ற தனியார் மனநல காப்பகத்தில் கடந்த திங்கள்கிழமை திடீரென தீ விபத்துஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மனநல காப்பகத்தில் இருந்த 27 பேர் இறந்து போனார்கள். மேலும் பலரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் மருத்துவமனையில் இறந்து போனதை அடுத்துதீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததால்தான் அவர்களால் தீ விபத்துஏற்பட்ட போது தப்பிக்க முடியவில்லை என்று தெரியவந்தது.
இதை அடுத்து தனியார் மனநல காப்பகத்தில் இருக்கும் நோயாளிகள் அனைவருக்கும் கால்களில்பூட்டப்பட்டிருக்கும் விலங்குகளை அகற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் விஜயகுமார்உத்தரவிட்டார்.
இதை அடுத்து வருவாய் துறை அதிகாரிகள் பலரும், விஜயகுமார் தலைமையில் மனநலம்பாதிக்கப்பட்டவர்களுக்கு பூட்டப்பட்டு வரும் விலங்குகளை உடைத்து எறிந்து வருகிறார்கள்.
ஆனாலும் மனநல காப்பகங்களை நடத்தி வருபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் விலங்குகள்உடைக்கப்பட்டால் அவர்கள் தப்பி விடுவார்கள் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் மன நல காப்பகங்களில் இருக்கும் பலரை அவர்களது உறவினர்கள் வீட்டுக்கு திரும்பஅழைத்துச் சென்று வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications