"இறந்த" மன நோயாளி வீடு வந்து சேர்ந்தார்
சென்னை:
ஏர்வாடி தீவிபத்தில் இறந்ததாக கருதப்பட்ட ஒரு மன நோயாளி அவரது வீட்டுக்கு உயிருடன் வந்து சேர்ந்தார்.
இதையடுத்து ஆறுமுகத்தின் உடலைப் பெறுவதற்காக அவரது தந்தை நடேசன் மற்றும் தாயார் ரஞ்சிதம் ஆகியோர்ஏர்வாடி விரைந்து வந்தனர். ஆனால் கருகிய நிலையில் உடல்கள் இருந்ததால் அவர்களால் ஆறுமுகத்தின் உடலைஅடையாளம் காண முடியவில்லை.
இதையடுத்து அனைத்து உடல்களும் ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்யப்பட்டதை பார்த்து விட்டு வீடுதிரும்பினார்கள்.
வீடு திரும்பிய அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆறுமுகம் வீட்டில் இருந்ததுதான் அவர்களுக்குஅதிர்ச்சி ஏற்படக் காரணம்.
ஒன்றுமே புரியாமல் ஆறுமுகத்திடம் விசாரித்தபோது, சித்த பிரமையுடன் இருந்த ஆறுமுகமும் மேலும் 3 மனநோயாளிகளும் தீவிபத்துக்குப் பின் அங்கிருந்து தப்பியுள்ளனர் என்பது தெரிய வந்தது.
ஆங்காங்கே பஸ்களில் ஏறி ஆறுமுகம் பூம்புகார் வந்துள்ளார். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்றுதெரியவில்லை. தங்களது மகன் எப்படி வந்து சேர்ந்தார் என்ற குழப்பத்தில் ஆறுமுகத்தின் பெற்றோர் இருந்தாலும்கூட அவர் உயிருடன் இருப்பதாக போலீஸில் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் தற்போது தப்பி ஓடிய மற்ற 3 பேர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications