சாப்ட்வேர் துறையின் எதிர்காலம் என்ன? சர்வே ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

கடந்த 6 மாதங்களாகவே சாப்ட்வேர் துறையில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளபொருளாதார வீழ்ச்சியின் காரணமாகத்தான் இத்தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அமெரிக்க நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள், இந்தியாவிற்கேதிரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆனால், குறுகிய காலத்தில் மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள இந்த சாப்ட்வேர் தொழிலுக்கு உண்மையிலேயேபாதிப்பு வந்து விட்டதா? அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் சரியாகிவிட்டால், இத் தொழில் மீண்டும்வளருமா? ஆயிரக்கணக்கான இந்திய சாப்ட்வேர் வல்லுநர்களின் "அமெரிக்க கனவு" மீண்டும் பலிக்குமா?

இந்தக் கேள்விகள் குறித்து இண்டியா இன்போ டாட் காமின் ஒரு பிரிவான கேரியர்இண்டியா டாட் காம் கடந்தஏப்ரல்-மே மாதங்களில் மிக விரிவான ஒரு சர்வே நடத்தியது. இந்த சர்வேயில் உலகம் முழுவதும் உள்ள இந்தியசாப்ட்வேர் நிபுணர்கள் பங்கேற்றனர். சமீபகாலத்தில் நடத்தப்பட்ட மிக விளக்கமான சர்வே இது.

இந்த சர்வேயில் பங்கேற்றவர்கள் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இது தான்: (விரிவான சர்வே ரிப்போட்கீழே)

    1.சாப்ட்வேர் தொழில் விரைவில் சரியாகிவிடும் என்று சர்வேயில் கலந்து கொண்ட 94 சதவிகிதத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    2.2001ம் ஆண்டு இறுதிக்குள் அல்லது 2002ன் ஆரம்பத்தில் சாப்ட்வேர் தொழில் மீண்டும் சக்கைப் போடு போடும் என்று பெரும்பாலானவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

    3.உலகின் மற்ற நாடுகளைவிட, இந்தியாவும் அமெரிக்காவும்தான் இந்த சாப்ட்வேர் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று பலர் கூறுகின்றனர்.

    4.சாப்ட்வேர் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை பத்திரிகை மற்றும் டிவி ஆகியவை ரொம்பவும்தான் மிகைப்படுத்தி விட்டன என்று சர்வேயில் கலந்து கொண்ட 90 சதவிகிதத்தினர் கூறுகின்றனர்.

    5.எந்தத் தொழிலிலும் ஏற்றம்-இறக்கம் இருக்கத்தானே செய்யும். அந்த வகையில், சாப்ட்வேர் தொழிலுக்கும் தற்போது சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று சிலர் கூறியுள்ளனர்.

    6.இன்னுமொரு முக்கியமான விஷயம்: இந்த சாப்ட்வேர் துறையில், வேலை நிரந்தரத்திற்கு உத்தரவாதமே கிடையாது என்று சர்வேயில் கலந்து கொண்ட 75 சதவிகிதத்தினர் நொந்து கொள்கின்றனர்.

முழு சர்வே ரிப்போர்ட்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+