கடலரிப்பிற்குப் "பலி"யான 20 குடிசைகள்
சென்னை:
சென்னை அருகே எண்ணூர் பகுதியில் கடலரிப்பு காரணமாக 20 குடிசை வீடுகள் கடலுக்குள் சென்று விட்டன.
இதனால் குப்பத்திற்குள் கடல் நீர் வர ஆரம்பித்தது. பல குடிசைகள் கடல்நீரினால் அடித்துச் செல்லப்பட்டன. மொத்தம் 20 குடிசைகள் வரை கடலுக்குள் சென்று விட்டன.
கடலுக்குள் குடிசைகள் சென்று விட்ட செய்தி அறிந்ததும் மாநில மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத்விரைந்து வந்து மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். கடலரிப்பைத் தடுக்க மாநில அரசு விரைவானநடவடிக்கை எடுக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.
எண்ணூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே கடலரிப்பு அதிகரித்துள்ளது. அப்பகுதியில் உள்ள பல மீனவக்குப்பங்களுக்குள் கடல் நீர் அடிக்கடி வந்து குடிசைகளை இழுத்துச் செல்வது சகஜமாகி விட்டது.
கடலரிப்பைத் தடுக்க வீராணம் திட்டத்திற்காக வாங்கப்பட்டு வீணாக கிடந்த பெரிய பெரிய இரும்புக் குழாய்களைப் போட்டுகடல் நீரைத் தடுத்துப் பார்த்தனர். ஆயினும் அதற்குப் பலன் இல்லை.
இதையடுத்து தற்போது காசிமேடு, எண்ணூர்துறைகம் ஆகிய பகுதிகளில் பெரிய பாறாங்கற்களைப் போட்டு கடல் நீரைத் தடுத்து வருகின்றனர்.
இருப்பினும் நிரந்தர தீர்வு அமைந்தால்தான் கடலோர குப்பங்கள் பாதுகாக்கப்படும் என்று மீனவர்கள்கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications