ராமதாசுக்கு திருமாவளவன்-கிருஷ்ணசாமி பதிலடி
சென்னை:
பா.ம.க. தலைவர் ராமதாஸ் எங்கள் மீது எடுக்கும் எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயார் என்று திருமாவளவன்மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் ராமதாஸ் சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பதாககுற்றம் சாட்டினார்.
பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தலித் விரோத கட்சி என்றும் சந்தர்ப்பவாத கட்சி என்றும் திருமாவளவனும்,கிருஷ்ணசாமியும் தாக்கிப் பேசி வந்தார்கள். இதையடுத்து திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் தொடர்ந்துஅவதூறாகப் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று ராமதாஸ் கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது:
1993ம் ஆண்டு மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டு என்னை இளம்பெரியார் என்றுபாராட்டினார். அனால், இன்று நாங்கள் அரசியலுக்கு வந்து ராமதாசின் சந்தர்ப்பவாதத்தை எல்லாம்அம்பலப்படுத்தி வருகிறோம். இதனால், அவர் ஆத்திரமடைந்து எங்களை தாக்கிப் பேசி வருகிறார்.
மேலும், அவருக்கு விடுதலைச்சிறுத்தைகளோடு இணக்கமாக இருக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லை.அதனால்தான் அவரைக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று வற்புறுத்தி வருகிறோம்.
மேலும் எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிவருகிறார். அவருடைய எந்தநடவடிக்கையையும் சந்திக்க நாங்கள் தயார் என்று திருமாவளவன் கூறினார்.
கிருஷ்ணசாமி அறிக்கை:
பாட்டாளி மக்கள் கட்சியின் சமீபத்திய அணிமாறும் வேகத்தை நாங்கள் விமர்சித்தோம். இதை ராமதாஸ் ஒருஆலோசனையாக ஏற்றுக்கொண்டிருந்தால் நல்லது.
அதை விடுத்து அவசரகதியில் வார்த்தைகளை அள்ளித் தெளித்துவிட்டார். இதன்மூலம் அவர் தலித் கட்சிகளுக்குஎதிரானவர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில்கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications