எங்களுக்கு கிடைக்காத அழகு...:ஈவ்-டீசிங் வாலிபர்கள் வாக்குமூலம்
நாகர்கோயில்:
எங்களுக்கு கிடைக்காத அழகு வேறு எவருக்கும் கிடைக்கக்கூடாது என்பதற்காகத்தான் மாணவிகள் மீது ஆசிட் வீசினோம் என்று மாணவிகள் மீதுஆசிட் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள் வாக்கு மூலம் அளித்து உள்ளனர்.
இவர்களை கேலி செய்த பைசல் என்ற வாலிபரை சரிதா திட்டினார். ஆசிரியரிடமும் புகார் கொடுத்தார். இதையடுத்து ஆசிரியர் பைசலைக் கூப்பிட்டு கண்டித்தார்.
இதையடுத்து அவமானப்பட்ட பைசல் இரு சகோதரிகள் மீதும் ஆசிட் வீசினார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து பைசல் நாகப்பட்டினம்நீதி மன்றத்தில் போய் சரணடைந்தார்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது நண்பர் ஆல்வின் என்பவர் கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்தபோது சிக்கினார். இவர்கள் இருவரையும்விசாரணைக்காக போலீசார் தக்கலைக்கு அழைத்து வந்தனர்.
பைசல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், எங்கள் வீட்டு வழியாகடியூஷனுக்கு சென்று வந்த சரிதாவை நான் காதலித்து வந்தேன். அதனால் நான்அவரை அடிக்கடி கேலி செய்து வந்தன்ே.
ஆனால் அவர் என்னை காதலிக்கவில்லை. நான் கேலி செய்தது குறித்து அவரதுடியூசன் ஆசிரியரிடம் புகார் செய்தார். அவர் என்னை கண்டித்தார். எனவே எனக்குகிடைக்காத அழகு வேறு எவருக்கும் கிடைக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
என் நண்பர் ஆல்வினுடன் சேர்ந்து ரூ. 20க்கு ஆசிட் வாங்கினேன்.
கடந்த சனிக்கிழமை (4ம் தேதி) மேக்காமண்டபம் அருகே ஆசிட் பாட்டிலுடன்மறைந்து நின்று கொண்டேன். ஆல்வின் வேறு பக்கம் நின்று கொண்டார்.
சரிதா அந்த பக்கம் வந்ததும் அவர் முகத்தில் ஆசிட் வீசினேன். அது அவள் அக்காள்மீதும் பட்டுவிட்டது. நான் உடனே அங்கிருந்து தப்பி ஓட்விட்டேன். நாகப்பட்டினம்போய் அங்கு நீதிமன்றத்தில் சரணடைந்தேன் என்றார்.
ஆல்வின் வாக்குமூலம்:
நான் 8ம் வகுப்பில் பெயிலாகி விட்டேன். நான் சபிதாவை காதலித்து வந்தேன்.ஆனால், அவர் என்னை காதலிக்கவில்லை.
நான் அவரை தொடர்ந்து கிண்டல் செய்து வந்தேன். நான் அவரை கேலி செய்ததுகுறித்து போலீசில் புகார் கொடுத்துவிட்டார். எனக்கு நீதிமன்றத்தில் ரூ 1,000 அபராதம்விதிக்கப்பட்டது.
அன்று முதல் நான் அவரை பழிவாங்க திட்டம் போட்டேன். அதற்கான நேரத்திற்காககாத்திருந்தேன்.
இந்த நிலையில் என் நண்பன் பைசல் சரிதாவை காதலித்து அவளால்அவமானப்பட்டது குறித்து தெரிந்து கொண்டேன்.
நாங்கள் இருவரும் சேர்ந்து சரிதா, சபிதா சகோதரிகள் அழகை சிதைக்க திட்டம்போட்டோம். அதன்படி அவர்கள் மீது ஆசிட் ஊற்றினோம் என்றார்.
பைசலும், ஆல்வினும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications