இலவச செருப்பு ஊழலிலும் சாட்சிகள் பல்டி
சென்னை:
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மீதான இலவச செருப்பு ஊழல் வழக்கில், 3 அரசுத்தரப்பு சாட்சிகள் திடீர் பல்டி அடித்துள்ளனர்.
இந்த வழக்கு மூன்றாவது தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைவெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 3 சாட்சிகள் இந்திர குமாரிக்குஆதரவாக சாட்சி அளித்தனர். இந்த மூவரும் திமுக ஆட்சியின்போது இந்திரகுமாரிக்குஎதிராக சாட்சி அளித்திருந்தனர்.
நேற்று மூவரும் பல்டி அடித்தனர்.
இதில் பத்மாவதி என்பவர் சாட்சி அளிக்கும் போது, தன்னை போலீசார் விசாரணை செய்தபோது, என்ன விசாரித்தார்கள் என்பது குறித்து நினைவு இல்லை என்று கூறினார்.
இதையடுத்து நிர்மலா என்பவர் சாட்சி அளித்தார். இதற்கு முன் நான் செருப்பு தயாரித்துசப்ளை செய்தேனா என்பது நினைவில்லை என்றார்.
இதே வழக்கில் காஞ்சனா என்பவரும் பல்டி அடித்து சாட்சியை மாற்றிக் கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை இந்த மாதம் 27ம் தேதிக்கு தள்ளி வைத்து மூன்றாவதுதனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் உத்தரவிட்டார்.
டான்சி வழக்கில் சார்பதிவாளர் முதலில் கொடுத்த சாட்சியத்தை மாற்றிக் கூறியுள்ளார்.இதனால், அந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இலவச செருப்பு ஊழல் வழக்கிலும் சாட்சிகள் பல்டி அடித்துள்ளதுமுக்கியத்துவம் பெறுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications