20ம் தேதி முதல் ஜவுளித் தொழிற்சாலைகள் ஸ்டிரைக்
கோயம்புத்தூர்:
தமிழகத்தில் உள்ள அனைத்து ஜவுளித் தொழிற்சாலைகளிலும் வருகிற 20 -ம் தேதி முதல் ஸ்டிரைக் என்றுதொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.
இந்தக்குழுவினர் தமிழக தொழில்துறை கமிஷ்னர் முன்னிலையில், மில் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, தொழிற்சங்கங்கள் வரும் 20 -ம் தேதி முதல் "ஸ்டிரைக்"கில் ஈடுபட முடிவெடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தைத் தடுப்பதற்காக மாநில அரசு அனைத்து மில் உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கப்பிரதிநிதிகளைஅழைத்துப் பேசி வருகிறது.
இருப்பினும், மில் உரிமையாளர்களும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் தங்கள் நிலையில் இருந்து இறங்கிவரமறுக்கின்றனர்.
இதனால் அரசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்தப்பிரச்சனைக்கு முடிவுகட்ட, 2 தரப்பினரையும் நிர்வாகத்தீர்ப்பாயத்திற்கு அழைக்க அரசு முடிவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications