யூ.டி.ஐ. ஊழலில் ஜெ.யா? - அமைச்சர் தம்பிதுரை ஆவேசம்
சென்னை:
யூ.டி.ஐ. ஊழலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சம்பந்தப்படுத்தி பா.ஜ.கவின் துணைத் தலைவர் அறிக்கைவெளியிட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என்று தமிழக கல்வி அமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.
யூ.டி.ஐ. ஊழலில் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள பா.ஜ.க., கொஞ்சம் கூட பொருந்தாத வகையில்ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டியிருப்பது வேண்டாத வேலை.
யூ.டி.ஐ. ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவர் சுப்பிரமணியத்திற்கும், அதிமுகதலைமைக்கும் இதில் ஏதோ தொடர்பு இருப்பது போல பா.ஜ.கவின் துணைத் தலைவர் அகர்வால் புகார்கூறியுள்ளார்.
இவருடைய இந்த அறிக்கை, கெட்ட எண்ணத்துடன், வேண்டுமென்றே, விஷமத்தனமான நோக்கத்துடன்வெளியிடப்பட்டுள்ள அறிக்கையாகும். சர்க்கரை ஊழல், தெஹல்கா டாட் காம் ஆயுத பேர ஊழல், தற்போதுயூ.டி.ஐ. ஊழல் என்று அடுத்தடுத்து ஊழல்களில் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கும் பா.ஜ.கவின்நேர்மை கேள்விக்குரியதாகி, கறைபடிந்து, பரிதாபகரமாகியுள்ளது.
தன்னுடைய நிலையை ஒழுங்குபடுத்திக் கொள்ள இயலாத பா.ஜ.க., பிறர் மீது பழிபோட வேண்டும் என்றஆர்வத்தில், அதிமுகவை பலிகடா ஆக்கப் பார்க்கிறது.
ஜெயலலிதா மீதான இந்தக் குற்றச்சாட்டில் எள்ளளவு கூட உண்மை இல்லை என்பதை நாடே அறியும்.இந்நிலையில், அவருடைய பெயரையும் இந்த யூ.டி.ஐ. ஊழலில் தொடர்பு படுத்தியிருப்பது மிகவும்துரதிருஷ்டவசமானது.
பா.ஜ.கவால் ஜோடிக்கப்பட்ட இந்தக் கட்டுக்கதையை, ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்த மக்கள் துளியும் நம்பமாட்டார்கள்.
"மாறுபட்ட கட்சி" என்று கூறிக்கொண்டிருக்கும் பா.ஜ.க. தற்போது தேய்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தூக்கிநிறுத்துவதற்குத் தேவையான சக்தியை இந்த தலைவர்கள் செலவழித்தால் நன்றாக இருக்கும் என்றார் தம்பிதுரை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications