3 ஐபிஎஸ் அதிகாரிகளை அனுப்ப ஜெ.வுக்கு மத்திய அரசு நாளை வரை கெடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய அரசுப் பணியில் சேருவதற்கு 3 தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளை நாளை (புதன்கிழமை)க்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கெடு வைத்துள்ளது.

சென்னை மாநகர கமிஷனர் முத்துக்கருப்பன், இணை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் துணை கமிஷனர் கிறிஸ்டோபர்நெல்சன் ஆகியோரை மத்திய அமைச்சகப் பணிகளில் நியமித்தது மத்திய அரசு.

இதையடுத்து, அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது.

ஆனால், மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதைக் கண்டித்த தமிழக முதல்வர்ஜெயலலிதா, 3 போலீஸ் அதிகாரிகளையும் அனுப்ப முடியாது என்று மத்திய அரசுக்குப் பதில் கடிதமும் அனுப்பிவிட்டார்.

சூட்டோடு சூடாக அவர் இன்னொரு காரியமும் செய்தார். மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் நடந்து கொண்டமத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும்ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இந்தக் கடிதத்திற்கு, காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் ராஜஸ்தான் மாநில முதல்வர் உடனடியாக மத்திய அரசைக்கண்டித்து, பிரதமருக்குக் கடிதம் எழுதி விட்டார். பாண்டிச்சேரி முதல்வரும் தன்னுடைய ஆதரவைத் தமிழகஅரசுக்குத் தெரிவித்தார். கர்நாடக முதல்வரோ, இக்கடிதம் விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்என்று கூறினார்.

இந்நிலையில், கருணாநிதி கைது செய்த சம்பவத்தைக் கண்டித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் நடத்தியபேரணி வன்முறையில் முடிந்தது. 5 பேர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர்.

கருணாநிதி கைது சம்பவத்தோடு, இந்த வன்முறைச் சம்பவத்தையும் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டதிமுகவினர், தமிழகப் போலீசாருக்கு எதிராகக் கண்டனக் கனைகளைத் தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கின்றனர்.

நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. லோக்சபா-ராஜ்ய சபா இரண்டிலுமே திமுக எம்.பிக்கள் ஏற்படுத்தியகளேபரம், அமளி காரணமாக நேற்றும் இன்றும் 2 சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், ஏற்கனவே கேட்டுக் கொண்டதுபோல், தமிழக அரசுக்கு மீண்டும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.3 ஐபிஎஸ் அதிகாரிகளும் மத்திய அமைச்சகப் பணிகளில் சேர்வதற்கு ஏற்ப, புதன்கிழமைக்குள் அவர்களைத்தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என்று கெடு வைத்துள்ளது.

இதேபோல், தற்போது தேசிய பாதுகாப்புப் படையான கறுப்புப் பூனைப் படைக்குத் தலைவர் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் மத்திய அரசு, அந்தப் பதவிக்காக நியமிக்கப்பட்ட டாக்டர் ஆர். ராஜகோபாலனையும் விடுவிக்கவேண்டும் என்று தமிழக அரசிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+