மாநகராட்சி கலைப்பு நோட்டீசுக்கு ஸ்டாலின் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சியை ஏன் கலைக்கக்கூடாது என்று தமிழக அரசு அனுப்பியிருந்த நோட்டீசுக்கு மேயர்ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து சென்னை மாநகராட்சி மேயருக்கு கடந்த மாதம் ஒரு கடிதம்வந்தது. அதில், சென்னை மாநகராட்சியை ஏன் கலைக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்கும்படிகேட்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து விளக்கம் அளிக்க ஒரு மாத கால அவகாசம் தேவை என்று ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பினார்.இதையடுத்து நேற்று (திங்கள்கிழமை) மாநகராட்சி மன்றத்தில் மேயர் ஸ்டாலின் அதற்கான விளக்கத்தைவாசித்தார்.

சபையில் அதிமுக மற்றும் த.மா.கா. ஆகிய எதிர்கட்சி உறுப்பினர்கள் அதை படிக்கவிடாமல் ரகளை செய்தனர்.இருந்தபோதும் ஸ்டாலின் தனது விளக்கத்தை நிறுத்தாமல் படித்துமுடித்தார்.

சில முக்கிய தீர்மானங்கள் இயற்றும் போது எதிர்கட்சி உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொண்டனர் என்பது உட்படபல விவரங்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அக்கடிதத்தில் ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது:

மேயருக்கு தெரியாமல் கமிஷனர் கடிதப்போக்குவரத்தில் ஈடுபட கமிஷனருக்கு அதிகாரம் இல்லை.மாநகராட்சியைப் பொறுத்தவரை மேயர்தான் முதன்மைப்பொருப்பில் உள்ளவர்.

எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தாலும், மன்றம் தனது நடவடிக்கைகளை முறையாகமேற்கொண்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியைக் கலைக்க விளக்கம் கோருவது, அரசியல் உள்நோக்கம் கொண்டதாகஇருக்கிறது. மேலும் யாருடைய தூண்டுதலாலோ இந்த விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது.

இது எதிர்காலத்தில் மக்களாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றுஅக்கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருந்தார்.

மேயர் தனது விளக்கத்தை சபையில் படித்துக்கொண்டு இருக்கும் போது, கராத்தே தியாகராஜன், வெற்றிவேல்உட்பட எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்றுகொண்டு கூச்சல் ஏழுப்பியவாறு இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+