இலங்கை: புலிகள் தாக்குதலில் 3 கடற்படை வீரர்கள் பலி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 3 இலங்கை கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.தொடர்ந்து நடந்த சண்டையில், 4 புலிகளும் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.
இதையடுத்து, விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் விமானப்படை தொடர்ந்து தாக்குதல்நடத்தி வருகிறது. 2 நாட்களுக்கு முன்னர் கூட, புலிகளின் தளம் ஒன்றை இலங்கை விமானப் படை விமானங்கள்தகர்த்தன.
இந்நிலையில், திரிகோணமலையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள கல்லரவா பகுதியில், புலிகள் திடீர் தாக்குதலைமேற்கொண்டனர்.
இத்தாக்குதலின்போது, புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலங்கை கடற்படையைச் சேர்ந்த 3 வீரர்கள்கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
கடற்படை வீரர்களும், விடுதலைப்புலிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அவர்களை நோக்கிச் சுட்டனர்.இதில் 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications