காஷ்மீர்: 10 ஆண்டுகளில் 13,000 தீவிரவாதிகள் கொலை

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 1990ம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு ஜுலை மாதம் வரை,போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் 13,326தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் தாக்குதலில் 9,319 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் இந்திய தரப்பில் 3,053 பேர்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 516 ராணுவ அதிகாரிகள், ராணுவவீரர்கள் மற்றும்போலீசார் ஆவர். 2,292 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேறு பிரிவைச்சேர்ந்தவர்கள்.

தீவிரவாதிகளின் துப்பாக்கி தாக்குதலிலும், குண்டு வீச்சிலும், கண்ணி வெடிகளில் சிக்கியும்9,319 அப்பாவி மக்கள் இறந்துளனர். 13,368 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிசண்டையின் போது 946 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 2,893 பேர் காயமடைந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 4,124 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்

தீவிரவாதிகளிடமிருந்து போலீசாரும், பாதுகாப்பு படையினரும் ஏராளமானவெடிமருந்துகள், வெடிகுண்டுகள், ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை22,406 ஏகே 47 ரக துப்பாக்கிகளும். 8, 910 துப்பாக்கிகளும், ரிவால்வர்களும், 3,857ராக்கெட்டுகளும், 691 ராக்கெட் லான்ச்சர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தவிர 42,658 கை எறிகுண்டுள், 27 டன் வெடிமருந்துகளும், 4,377கண்ணிவெடிகளும். 52 குவிண்டால் ஆர்.டி.எக்ஸ். மருந்து உள்ளிட்ட பல வெடிமருந்துகளும் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

3,198 வயர்லெஸ் செட்டுகளும், 507 பைனாகுலர்களும் தீவிர வாதிகளிடமிருந்துகைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தகவல்களை ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+