பேரணி வன்முறை: சி.பி.ஐ. விசாரணைக்கு திமுக-நிருபர்கள் கோரிக்கை
சென்னை:
தி.மு.க. நடத்திய கண்டன பேரணியின் போது ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கம், நிருபர்கள் சங்கம்,பிரஸ் கிளப் ஆகிய 3 அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கு எதிர்பு தெரிவித்து பத்திரிக்கையாளர் சங்கம், நிருபர்கள் சங்கம், பிரஸ் கிளப் ஆகியவற்றை சேர்ந்தவர்கள்புதன்கிழமை அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 12ம் தேதி தி.மு.க. பேரணியில் நடந்த கலவரத்தின் போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வியாழக்கிழமை முதல் நடைபெற இருக்கும் சட்டசபை கூட்டம் மற்றும் பட்ஜெட் உரைகளின் போது செய்திசேகரிக்கச் செல்லும் நிருபர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும்.
போலீஸ் கமிஷனர்-நிருபர்கள் சந்திப்பின் போதும் கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும்.
தாக்குதலின்போது, புகைப்பட நிருபர்களிடமிருந்து போலீசார் பறித்துச் சென்ற பிலிம் ரோல்கள், காமிராக்கள்மற்றும் பல உபகரணங்களை போலீசார் திரும்ப தர வேண்டும்.
போலீசார் தாக்குதலின் போது, சேதமடைந்த வீடியோ காமிராக்களுக்கும், புகைப்பட காமிராக்களுக்கும் நஷ்ட ஈடுவழங்க வேண்டும்.
போலீசார் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின்அறிக்கை ஆளுநருக்கும், இந்திய பிரஸ் கவுன்சிலுக்கும், மாநில தலைமைச் செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்படும்.
இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிபிஐ விசாரணைக்கு திமுகவும் கோரிக்கை
இன்று (வியாழக்கிழமை) காலை நாடாளுமன்ற வாசலில் திமுக எம்.பியான விடுதலைவிரும்பி, நிருபர்களுக்குப்பேட்டியளிக்கும்போது, திமுக பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications