பழனியில் ஜெ. பெயரில் சசிகலா அர்ச்சனை
பழனி:
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நேற்று (புதன்கிழமை) பழனி முருகன்கோவிலில் ஜெயலலிதா பெயரில்அர்ச்சனை செய்து சாமிகும்பிட்டார்.
ஆனால் சசிகலா மலையடிவாரத்திலிருந்து 699 படிகள் நடந்தே ஏறி, மலை உச்சியில் உள்ள முருகன் கோவிலுக்குச்சென்றார். பிறகு முருகன் கோயிலில் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கோவிலில் நடந்த தரிசன பூஜை மற்றும் விலா பூஜைகளில் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா பெயரிலும்,தனது பெயரிலும் சசிகலா அர்ச்சனை செய்தார். மேலும், ஆறுகால பூஜைக்கும் பணம் செலுத்தி ஜெயலலிதாபெயரில் அர்ச்சனை செய்து சென்னைக்கு அனுப்பிவைக்கும்படி கூறினார்.
சாமியை தரிசித்து விட்டு மீண்டும் படிகள் வழியாகவே கீழே இறங்கி வந்தார் சசிகலா. பிறகு கார் மூலம் மதுரைக்குச்சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.
பழனியில் பக்தர்கள் மலையேற "ரோப் கார்":
பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படிக்கட்டு மூலம் மலை ஏற முடியாது என்பதால் இதுவரை விஞ்ச்பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலேயே பழனிகோவிலில்தான் விஞ்ச் இருக்கிறது. இங்கு மொத்தம் 3 விஞ்ச்சுகள் இருக்கின்றன. இதன்மூலம் 1 மணி நேரத்திற்கு 96 பயணிகள் மட்டுமே மலைக்கோவிலுக்குச் செல்லமுடியும்.
திருவிழா காலங்களில் பெருகிவரும் பக்தர்கூட்டத்தை சமாளிக்க இந்த 3 விஞ்ச்சுகள் போதாது. எனவே, அதிகஅளவில் பக்தர்களை ஏற்றிச்செல்வதற்காக நவீன "ரோப்கார்" என்ற இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று கோவில்நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்காக 4 கோடி செலவில் இந்த புதிய இயந்திரம் நிறுவப்பட உள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் 1மணிநேரத்திற்கு 800 பேர் மலைக்கோவிலுக்குச் செல்லமுடியும்.












Click it and Unblock the Notifications