யூ,டி.ஐ. ஊழல்: ஜெ. மீதான குற்றச்சாட்டை திடீரென மறுக்கிறது மத்திய அரசு
டெல்லி:
விதிமுறைகளின் அடிப்படையில் தான் யூ.டி.ஐ. தலைவராக சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவரைநியமிக்கக் கோரி யாரும் (ஜெயலலிதா) சிபாரிசு ஏதும் செய்யவில்லை என மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா நாடாளுமன்றத்தில் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமானஜார்ஜ்பெர்ணான்டஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்தார்.அப்போது நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில்,
யூ.டி.ஐ. ஊழலில் தொடர்புடைய அதன் முன்னாள் தலைவர் சுப்பிரமணியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்தார். அவரை யூ.டி.ஐ. தலைவராக நியமிக்க வேண்டும் என்று என்னிடம் கடிதமேகொடுத்தார்.
அப்போது அவர் பா.ஜ.க. அரசை ஆதரித்து வந்தார். எனவே, அவரது பரிந்துரையை ஏற்று சுப்பிரமணியம்நியமிக்கப்பட்டார். இப்போது சுப்பிரமணியம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார். எனவே ஜெயலலிதாவுக்கும் கூடயூ.டி.ஐ ஊழலில் தொடர்பு உள்ளது என்றார்.
இந்த கருத்தை ஜெயலலிதா மிகக் கடுமையாக மறுத்தார்,
இந் நிலையில், சுப்பிரமணியம் யூ.டி.ஐ. தலைவராக நியமனம் செய்யப்பட்டது பற்றி விளக்கமளிக்க வேண்டும்என்று பாராளுமன்றத்தில் காங்கிரசார் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினர்.
இது குறித்து விளக்கமளித்த நிதி அமைச்சர் சின்ஹா கூறியதாவது,
தற்போது சி.பி.ஐ விசாரணையில் உள்ள சுப்பிரமணியம், யூ.டி.ஐ. தலைவராக விதிமுறைகளின் அடிப்படையில்தான்நியமிக்கப்பட்டார். யூ.டி.ஐ. தலைவரை நியமனம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தபுத்தகத்தில் உள்ள அனைத்து வழிகாட்டுதலையும் மத்திய அரசு கடைபிடித்துள்ளது என்றார்.
அப்போது இடைமறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் கொறடாவான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி,ஜெயலலிதாதான் யூ.டி.ஐ தலைவர் பதவிக்கு சுப்பிரமணியத்தை சிபாரிசு செய்தார் என்று ஜார்ஜ் பெர்ணான்டஸ்கூறியிருக்கிறார். அவர் ஏன் அவ்வாறு கூறவேண்டும் என்று கேட்டார்.
கூட்டணிக் கட்சிகளின் பரிந்துரையை ஏற்று யூ.டி.ஐ தலைவரை எப்படித் தேர்ந்தெடுக்கலாம் என்றார்.
மேலும் இது பற்றி பிரதமர் தகுந்த விளக்கம் அளிக்கும்வரை காங்கிரஸ் கட்சி போராடும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், முனிஷியின் கேள்விக்கு சின்ஹா ஏதும் விளக்கம் அளிக்கவில்லை.
சின்ஹாவின் இந்தப் பேச்சின் மூலம் ஜெயலலிதா மீது பெர்னாண்டஸால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுவலுவிழந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications