சாவு எண்ணிக்கை 30 ஆனது
காட்பாடி:
காட்பாடி வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகிவிட்டது.
காட்பாடி-சித்தூர் சாலையில், காட்பாடியிலிருந்து 5 கி.மீ. தூரத்தில், பாறைகள் நிறைந்த மலைப் பகுதியில் இந்தவெடிமருந்துத் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இத்தொழிற்சாலையின் 302வது பிரிவில், டெட்டனேட்னர் வகை வெடிகுண்டு ஒன்று பலத்த சத்தத்துடன்வெடித்ததால்தான், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. தூரத்திற்கு இந்த வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பகுதிமக்கள் கூறுகின்றனர்.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு, ரூ.50,000 நஷ்ட ஈடும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000 நஷ்டஈடும், காயமடைந்த மற்றவர்களுக்கு ரூ.6,000 நஷ்ட ஈடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விபத்து நடந்துள்ள அந்தத் தொழிற்சாலையில், மேலும் வெடிகுண்டுகள் வெடித்துவிடாத படி, பாதுகாப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்துநடந்த 302வது பிரிவின் மேற்பார்வையாளர், அப்போது வெளியே சென்றிருந்ததால், அவர் உயிர் தப்பி விட்டார்.
விபத்து நடந்த இடத்திற்கு, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டுரங்கனும், தொழில்துறை அமைச்சர்வைத்திலிங்கமும் விரைந்துள்ள நிலையில், உயர் போலீஸ் அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும்,வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் மோகன்தாஸ் விபத்து நடந்த இடத்தில் முகாமிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications