இது தான் ஜெ. பகுத்தறிவு: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி மாற்றியமைக்கப்பட்டதற்குஜெயலலிதாவின் பகுத்தறிவு பரிணாமம்தான் காரணம் என தி.மு.க. தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க எம்.எல்.ஏ பெருமாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின் எதிர்கட்சிஉறுப்பினர் என்று கூட பார்க்காமல் பட்ஜெட் அறிக்கையை ஒத்தி வைத்து விட்டோம்என்று சபாநாயகர் காளிமுத்து சொல்வது பாராட்டத்தக்க செய்தியாக இருக்கலாம்.
ஆனால் உண்மையிலேயே பட்ஜெட் படிக்க 16ம் தேதி இயலவில்லை என்றால், 17ம்தேதி பட்ஜெட்டை படித்திருக்கலாம்.
அவ்வாறு 17ம் தேதி பட்ஜெட்டை படிக்காததற்கு காரணம் என்னவென்றால் 17ல்உள்ள ஒன்றையும் ஏழையும் கூட்டினால் 8 என்ற இரட்டைப்படை எண் வரும்.
பகுத்தறிவு பரிணாம வளர்ச்சியில் இரட்டைப்படை எண்ணை எப்படி தேர்ந்தெடுக்கமுடியும்? இதனால்தான் 18ம் தேதி பட்ஜெட் படிக்கப்பட உள்ளது.
18ம் தேதியின் கூட்டுத்தொகை 9 என்ற ஒற்றைப்படை எண்ணில் வருகிறது. மேலும்18ம் தேதி அமாவாசை என்பதாலும், வளர்பிறை தொடங்குவதாலும் அன்றைய தினம்பட்ஜெட்டை படிப்பது நல்லது என்று பகுத்தறிவு பரிணாம வளர்ச்சியில்கூறியிருக்கக்கூடும்.
இதனால் தான் பெருமாள் மரணத்தை சாக்காக வைத்து பட்ஜெட் தேதியை ஒத்திவைத்துள்ளார்கள் என்று அந்த அறிக்கயிைல் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications