அழகியுடன் சல்லாபம்: மதுரை போலீஸ் ஏட்டு கைது
மதுரை:
மதுரையில் விபச்சாரத்தைத் தடுக்க வேண்டிய போலீஸ் ஏட்டு ஒருவர் அழகியுடன் உல்லாசமாக இருந்தபோதுகையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.
இவர் போலீசார் நடத்திய திடீர் ரெய்டில் ஒரு அழகியின் வீட்டில் அவளுடன் சல்லாப சரசமாடியபோது பிடிபட்டார்.இதுபற்றிய விவரம் வருமாறு,
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் அவனியாபுரம் கணக்குப்பிள்ளைத் தெருவில் "சிவனே"என்று நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தப்பக்கமாக வந்த ஒரு பெண் பரமசிவத்திடம், "என்னங்க....500 ரூபாய்தான் ஒரு நைட்டுக்கு....இந்தா, இங்க தான் என் வீடு இருக்கு .... வாங்க.." என்று அழைத்திருக்கிறார்.
இதைக் கேட்ட பரமசிவம் "வெலவெலத்து"ப் போனார். பிறகு "இது என்னடா வினையாப் போச்சு"என்று அங்கிருந்து"விருவிரு" என்று நடக்க ஆரம்பித்தார்.
அப்போது அந்த வழியாக அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தம்பிராஜன் மற்றும் போலீசார்ரோந்துப் பணிக்கு வந்துகொண்டிருந்தார்கள்.
இதையடுத்து பரமசிவம் வியர்க்க விறுவிறுக்க அவர்களிடம் ஓடிச் சென்று, தனக்கு நேரவிருந்த அசம்பாவிதத்தைவிளக்கினார். இதைக்கேட்ட போலீசார் அந்த வீட்டைக் காண்பிக்குமாறு பரமசிவத்திடம் கூறினார்கள்.
பரமசிவம் காட்டிய வீட்டுக் கதவை போலீசார் தட்டினர். இன்னொரு கிராக்கி வந்துள்ளதாக நினைத்துக் கொண்டுகதவைத் திறந்தனர். உள்ளே, ஒரு அழகியுடன் சரசமாடிக் கொண்டிருந்தவர் வேறுயாருமல்ல. அவர் அவனியாபுரம்ஏட்டு தர்மராஜ் தான். அடிக்கடி இந்த வீட்டிற்கு விஜயம் செய்வது இந்த ஏட்டுக்கு வாடிக்கையாம்.
உடனே போலீசார், ஏட்டு தர்மராஜை கைது செய்தனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த திருமங்கலத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன், கண்ணாயிரம் மற்றும் 2 அழகிகளை கைதுசெய்தனர்.
பிறகு இவர்கள் அனைவரும் மதுரை ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் 7 -வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications