சென்னையில் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் உள்ள காமராஜர் சாலையில், ஒரு பஸ் டிரைவரை பயணி ஒருவர் அடித்துவிட்டதால் பஸ் டிரைவர்கள்-கண்டக்டர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரைப் பகுதியில் 2மணி நேரத்திற்கு சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

காமராஜர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வந்து கொண்டிருந்த ஒரு பஸ்சின் பயணிக்கும், பஸ் டிரைவருக்கும்இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் அடிதடியாக மாறியது. பஸ் டிரைவரை அடித்தஅந்தப் பயணி, பஸ்சிலிருந்து இறங்கி தப்பி விட்டார்.

அடிபட்ட டிரைவர், அப்பகுதியில் வந்த பிற பஸ்களை நிறுத்தி நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து,அப்பகுதியில் வந்த அனைத்து மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அப்படியே நடு ரோட்டில்நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை என்பதால் கடற்கரைக்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அடித்த பயணியை கைதுசெய்து நடவடிக்கை எடுத்தால்தான் பஸ்களை எடுப்போம் என டிரைவர்கள் கூறி விட்டனர்.

பின்னர் போலீஸாருக்குத் தகவல் சென்றது. அவர்கள் விரைந்து வந்து பேச்சு நடத்தினர். போக்குவரத்துஅதிகாரிகளும் விரைந்து வந்து ஊழியர்களை சமாதானப்படுத்தி பஸ்களை எடுக்க வைத்தனர்.

கண்ணகி சிலை அருகே சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள்கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+