ராமதாஸ் அராஜகம்: வன்னியர் சங்கம் குற்றச்சாட்டு
சென்னை:
ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோரின் அராஜக செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னிய சங்கத் தலைவர் நடராஜன் கூறியுள்ளார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் அவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு என்னையும் வன்னியர் சங்கநிர்வாகிகளையும் தாக்கியது, உத்திரமேரூர் விஸ்வநாதனின் காரை தீ வைத்து கொளுத்தி சேதம் ஏற்படுத்தியது,ராமதாசின் ஊழல்களை வெளியிடுவதற்காக "டாக்டருக்கு மனம் திறந்த மடல்" என்ற புத்தகத்தை ராயப்பேட்டைஅச்சகத்தில் நுழைந்து கொள்ளையடித்தது, பாண்டிச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்துகளைசேதப்படுத்தியது மற்றும் மீனவ பெண்ணை சாகடித்தது, தீரனின் கூட்டத்தில் அடியாட்களைவிட்டு ரகளை செய்ததுஉள்ளிட்ட வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.
இந்த செயல்களுக்கு தூண்டுதலாக இருந்த ராமதாசின் மகன் அன்புமணி, ஏ.கே. மூர்த்தி,எம்.பி, காட்டுவெட்டி குரு,கடலூர் வேல் முருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் அராஜக செயல்களுக்கு தமிழகஅரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ராமசாமி படையாச்சி சிலையை அவர் பிறந்து வாழ்ந்த கடலூர் பகுதியில் நிறுவி அதை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைக்க வேண்டும். சைதாப்பேட்டை சட்டசபை இடைத் தேர்தலில் வன்னியர் சங்கத்தின் வேட்பாளரை இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட ஜெயலலிதா அனுமதிக்க வேண்டும்.
ராமதாசின் சுயநல சந்தர்ப்பவாதத்தால் வன்னிய சமுதாய மக்களுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று காட்டுகிறேன் என்று சவால் விட்டு, தனது உண்மை பலத்தைதுகிலிருத்துக் காட்ட அவரே சந்தர்ப்பம் அளித்துள்ளார். அவரது சவாலை அனைத்துக் கட்சிகளும் சமுதாயஅமைப்புகளும் ஏற்று செயல்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் நடராஜன் கூறியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications