வினை விதைத்தார், வினை அறுக்கிறார்: கருணாநிதி குறித்து த.மா.கா. வர்ணனை
சென்னை:
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல கருணாநிதி முன்பு செய்ததவறுகளுக்காக தற்போது ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்று சட்டசபையில்தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏவும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமானசோ.பாலகிருஷ்ணன் பேசினார்.
தமிழகத்தில் கருணையில்லா ஆட்சிஒழிந்து நல்லாட்சி ஏற்பட்டுள்ளது. மக்கள்தேவைகளை உணர்ந்து பட்ஜெட் போடப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கநல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தரிசு நிலங்களை மேம்படுத்தும் திட்டத்தில், தமிழகத்திலுள்ள பகுதிகளை இரண்டாகபிரிக்க வேண்டும்.
ஒன்று தஞ்சாவூர், கோவை, திண்டுக்கல் போன்ற வளமிக்க பகுதிகள், இரண்டாவது,மிகவும் வறட்சியான ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தர்மபுரி போன்றபகுதிகள்.
வறட்சியான பகுதிகளில் பயிரிடக்கூடிய பயிர்களை தேர்ந்தெடுத்து விவசாயம்செய்வதற்கு திட்டமிட வேண்டும். இதற்காக எம்.எல்.ஏக்கள் குழுவை இஸ்ரேலுக்குஅனுப்பி வைத்து, அங்குள்ள விவசாய தொழில்நுட்பத்தை அறிந்துவரச் செய்துதமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று சென்ற அரசிடம் கேட்டுக் கொண்டேன்.ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை.
இந்த அரசாவது எங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி, விவசாய தொழில்நுட்பவளர்ச்சிகளை அறிந்துவரச் செய்ய வேண்டும்.
ஏர்வாடி மனநல காப்பகங்கள் குறித்து கடந்த ஆட்சியில் சட்டசபையில் நான்விரிவாக பேசியும், அந்த அரசு காது கொடுதது கேட்காததால், தற்போது 25க்கும் மேல்உயிர்கள் பலியாகி உள்ளன.
எனினும், இந்த அரசு உடனடியாக செயல்பட்டு மன நோயாளிகளை அரசுக்காப்பகங்களில் அனுமதித்ததற்காக பாராட்டுகிறேன்.
ராமநாதபுரத்தில் அரசு மனநல காப்பகம் அமைப்பதற்கான முயற்சியில்களில் இந்தஅரசு தீவிரமாக உள்ளது. அங்கு அமைப்பது போல ஏர்வாடியிலும் மனநலமருத்துவமனை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்குஉள்ளதால் அது பற்றி விவாதிக்க விரும்பவில்லை, ஆனால் ஓரு சம்பவத்ததைவிவரிக்க விரும்புகிறேன்.
1971ம் ஆண்டு திமு.க. வெற்றி பெற்றது. காங்கிரஸ் தோல்வி அடைந்ததது.இதையடுத்து காமராஜரை கடுமையாக விமர்சித்து தி.மு.கவினர் போஸ்டர் அடித்தும்,செய்திகள் வெளியிட்டும் வந்தனர்.
அப்போது, காமராஜரின் நெருங்கிய நண்பரான தனுஷ்கோடி நாடார் என்பவர்நடத்தி வந்த நவசக்தி என்ற இதழில் ஒரு கட்டுரை வெளியானது.
அதில், தி.மு.கவின் வெற்றிக்கு காரணம் எம்.ஜி.ஆரும், இந்திரா காந்தியும்தான்காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்,
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, உடனடியாக தனுஷ்கோடி நாடாரைகைது செய்ய உத்தரவிட்டார். இரவு நேரத்தில் தனுஷ்கோடி நாடார் கைதுசெய்யப்பட்டார்.
மறுநாள் இதை அறிந்த காமராஜர் மிகவும் வேதனைப்பட்டார். 75 வயது தியாகியானதனுஷ்கோடி நாடார் சிறையில் சிரமப்படுவார் என்று கூறிய காமராஜர், ஜாமீன் பெறமுயற்சித்தார்.
ஆனால், பயங்கரமான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த காரணத்தால்ஜாமீன் கிடைக்கவில்லை.
22 நாட்கள் சிறையில் சிரமப்பட்ட பின்னர்தான் தனுஷ்கோடி நாடார்விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தற்போது ஒப்பிடும் போது, வினைவிதைத்தவன் வினை அறுப்பான் என்பது நிருபணமாகிவிட்டது.
இவ்வாறு சோ. பாலகிருஷ்ணன் பேசினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!