2 வழக்குகளில் சுதாகரனுக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம்2 வழக்குகளில் ஜாமீன் வழங்கியுள்ளது.

போதைப் பொருள் வைத்திருந்த வழக்கு, அதை பயன்படுத்திய வழக்கு, மற்றும் தனது உதவியாளர் கோபு ஸ்ரீதரைத்தாக்கிய வழக்கு ஆகிய 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் சுதாகரன்.

இவர் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவரது வீட்டில்சோதனை செய்யப்பட்டபோது 16 கிராம் "ஹெராயின்" என்ற போதைப்பொருள் கிடைத்ததாகவும், அவர் அதைப்பயன்படுத்தி வந்ததாகவும் 2 வழக்குகளை போலீசார் பதிவு செயத்னர்.

இதைத் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் கடந்த மாதம் சிவாஜி இறந்த போது 2 முறை நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.

பிறகு சுதாகரன் தனக்கு ஜாமீன் கோரி மனுசெய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

எனது வீட்டில் நான் ஹெராயின் வைத்திருக்கவில்லை. எனக்கும் ஹெராயினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்மீது வேண்டுமென்றே பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. என் ரத்தத்தை அப்போதே போலீசார் பரிசோதித்துஇருந்தால் நான் குற்றமற்றவன் என்பது தெரிந்திருக்கும்.

மேலும் நான் கடந்த 2 முறை ஜாமீனில் வந்தாபோது கோர்ட் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் தவறாதுகடைபிடித்தேன்.

எனவே எனக்கு ஜாமீன் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தனது மனுவில் சுதாகரன் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி தமிழ்வாணன் முன்பு விசாரணைக்குவந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,

சுதாகரனை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்துவிட்டு, போலீசார் அவரது வீட்டை சோதனைபோட்டுள்ளனர். அப்போது அந்த வீட்டில் ஹெராயின் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் வீட்டை சோதனை செய்த அதிகாரி இது குறித்து தனது மேலதிகாரிக்கு எழுத்து மூலமாகத்தெரிவிக்கவில்லை. அது நடைமுறைக்கு மாறானது. மேலும் இந்த வழக்கில் சட்டபூர்வமான ஆதாரங்கள் எதுவும்இல்லை.

அடுத்ததாக போதைப் பொருள் வாங்கியதாக கூறப்படும் வழக்கிலும் கைதி ஒருவரின் வாக்குமூலத்ததைத் தவிரமற்ற ஆதாரங்கள் எதுவும் இல்லை.

எனவே இந்த 2 வழக்குகளிலும் தலா ரூ.50 ஆயிரத்துக்குச் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு 2 நபர் ஜாமீனும்வழங்கப்படுகிறது.

ஜாமீனில் வெளிவந்த பிறகு, வழக்குகளுக்காக கோர்ட்டில் ஆஜராகும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காலை10.30 மணிக்கு சுதாகரன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.

மேலும் கோர்ட் அனுமதியில்லாமல் அவர் சென்னையை விட்டு வெளியேறக்கூடாது.

இவவாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

ஆனால் கோபு ஸ்ரீதரைத் தாக்கிய வழக்கில் அவருக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை. எனவே அந்தவழக்கிலும் ஜாமீன் பெற்றால் தான் சுதாகரன் வெளியில் வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், கோபுவைத் தாக்கிய வழக்கிலும் ஜாமீன் கோரியுள்ளார் சுதாகரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+