கருணாநிதி சட்டசபைக்கு வராதது ஏன்? - ஜெ.கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்.எல்.ஏவாகப் பதவியேற்ற பிறகு சட்டசபைக்கு வந்து ஜனநாயகக் கடமையாற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதிமறுப்பது ஏன் என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமன்றத்தில் முக்கியமான பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும்போது கூட கருணாநிதி சட்டசபைக்கு வர மறுப்பதன்மூலம் அவர் ஜனநாயகக் கடமை ஆற்ற தவறியுள்ளார் என்று ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

இது பற்றி நிருபர்கள் கருணாநிதியிடம் கேட்டதற்கு "இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்பின்பற்றிய வழியைத் தான் நானும் பின்பற்றுகிறேன்" என்றார்.

கருணாநிதியின் இந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து மதுல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்தஅறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

எம்.ஜி.ஆரும் நானும் சட்டசபையைப் புறக்கணித்தாக கருணாநிதி கூறுகிறார். ஆனால் நாங்கள் இருவரும்எதிர்கட்சித் தலைவர்களாக இருந்தபோது சட்டசபைக்கு வராமல் இருந்தததில்லை. எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்துபிரிந்த பிறகும் சட்டசபைக்கு வந்துகொண்டுதானிருந்தார்.

1972ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி சட்டசபையில் அவருக்கு திமுக உறுப்பினர்களால் ஏற்படுத்தப்பட்டஅவமானத்திற்குப் பிறகு சட்டசபை "செத்துவிட்டது" என்று கூறி அவர் வாராமல் இருந்தார். அதற்குப் பிறகு வந்ததேர்தல்களில் அதிமுகவே வெற்றி பெற்று வந்ததால் அவர் ஒரு நாள் கூட சட்டசபையைப் புறக்கணித்ததில்லை.

இந்த உண்மை தமிழக மக்களுக்குத் தெரியும். என்னைப் பொருத்தவரை 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதிசட்டசபையில் திமுக உறுப்பினர்களால் நான் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டதை நாடே அறியும்.

அதன் பிறகு சட்டசபைக்குள் எனக்குப் பாதுகாப்பில்லை என்று கருதி, நான் சட்டசபைக்குச் செல்லவேண்டாம் என்றுமுடிவெடுத்தேன்.

ஆனால் கருணாநிதி எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுக் கொள்ளவே கொள்ளைப் புறமாக வந்துவிட்டுப்போய்விட்டார். காரணமே இல்லாமல் அவர்கள் வரவில்லை அதனால் நானும் வரவில்லை என்று சாக்குப்போக்குச்சொல்வது ஏன்?.

நான் தான் தமிழ்நாட்டில் அதிக முறை எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று அடிக்கடி தன்னைத்தானேபாராட்டிக்கொள்ளும் கருணாநிதி சட்டசபைக்கு வராமலிருப்பது ஏன்?.

தங்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி நலப்பணிகள் செய்ய உறுதுணையாக இருப்பார் என்று தான் சேப்பாக்கம்தொகுதி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர்.

ஆனால் கருணாநிதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இதனால் கருணாநிதியை அந்தத் தொகுதிமக்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள்.

இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+