அமைதியாக நடந்தது இந்து முன்னணி விநாயகர் ஊர்வலம் - ராமகோபாலன் கைதாகி விடுதலை
சென்னை:
சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் ஊர்வல ம் அமைதியாகநடந்து முடிந்தது. ஐஸ்ஹவுஸ் வழியாக ஊர்வலம் செய்ய அனுமதி தரவேண்டும் என்று தர்ணா செய்த இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் கைது செய்யப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டார்.
சனிக்கிழமை முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.சனிக்கிழமை சிவசேனா சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது.
ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி சென்னையில் விநாயகர்ஊர்வலம் செல்லும் பாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சாலைகளில் போக்குவரத்துதடை செய்யப்பட்டிருந்தது.
மதியம் 1.30 மணிக்கு விநாயகர் ஊர்வலம் தொடங்கியது ஊர்வலத்தை இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன்துவக்கி வைத்தார்.
மாலை 4.30க்கு விநாயகர் சிலைகள் கடற்கரையை சென்றடைந்தன. அங் கொண்டுவரப்பட்டிருந்த 18 அடி உயரவிநாயகர் சிலைக்கு ராம கோபாலன் பூஜை செய்தார். அதன் பின் விநாயகர் சிலைகள் கரையில் கரைக்கப்பட்டன.
ராமகோபாலன் கைது
இதன் பின் ராம கோபாலன் சிறிய விநாயகர் சிலையுடன் திருவல்லிக்கேணி பாரதி சாலைக்கு வந்தார். ஐஸ் ஹவுஸ்மசூதி வழியாக ஊர்வலமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டார். அதற்குபோலீசார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து ராம கோபாலன் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார்.
இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட ராமகோபாலனையும், அவருடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்ட இந்துமுன்னணி அமைப்பைச் சேர்ந்த 31 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து ராமகோபாலன், "சென்ற ஆட்சியிலும் இதே போல்தான் நடந்தது. தற்போது சூழ்நிலை மாறியிருக்கும்என்று நினைத்தேன். ஆனால் மாறவில்லை. பா.ஜ.ஆட்சி செய்து இதுபோல் தடை விதித்தால், அவர்களையும்எதிர்த்து போராடுவேன்" என்றார்.
பின்னர், சில மணி நேரங்களிலேயே ராமகோபாலன் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கமிஷனர் முத்துக்கருப்பனுக்கு வாழ்த்து கோஷம்
விநாயகர் ஊர்வலம் மிகவும் அமைதியாக நடந்தது. ஊர்வலத்தில் பங்கேற்வர்கள் போலீசாருடன் நன்குஒத்துழைத்தனர் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறினார்.
ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்ன. வீடுகளில் இருந்து சிறு விநாயகர்சிலைகளும் கொண்டு வரப்பட்டன.
விநாயகர் ஊர்வலத்தையொட்டி சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்த சென்னை நகர போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பனுக்கு இந்து முன்னணியை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஊர்லவத்தில் வந்த இந்துமுன்னணியினர், "முத்துக்கருப்பன் வாழ்க" என்றும் கோஷமிட்டனர்.
பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications