குமரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் அடுத்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரி செயல்படத்துவங்கும் என்று மாநில சுகாதாரத் துறை செயலாளர் சையத் முனீர் ஹோதா கூறியுள்ளார்.
ஏர்வாடி தீவிபத்தையடுத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மன நலப் பிரிவுகள் துவக்கப்பட வேண்டும்என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மன நலமருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப் பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி அடுத்த ஆண்டுமுதல் செயல்படத் துவங்கும்.
தர்மபுரி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவேஇந்த மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறுநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் சையத் முனீர்.












Click it and Unblock the Notifications