தமிழகத்தில் விரைவில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
சென்னை:
பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், தமிழகத்தில் விரைவில்தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தமிழகக் கல்வி அமைச்சர் தம்பிதுரை கூறினார்.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 222 பொறியியல் கல்லூரிகளும், 205 பாலிடெக்னிக்குகளும் உள்ளன. இவற்றில்சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
62,934 மாணவ-மாணவிகள் பொறியியல் கல்லூரிகளிலும், 47,324 பேர் பாலிடெக்னிக்குகளிலும்சேர்க்கப்படுகின்றனர். ஆனால், இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லை என்றநிலைதான் தற்போது நிலவுகிறது.
அதனால், பொறியியல் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக்குகளிலும் இன்னும் அதிக அளவு பயிற்சி பெற்ற,தகுதியான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும், விரைவில் தொடங்கப்படவிருக்கும் "தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" மூலமாக, அனைத்துப் பொறியியல்கல்லூரிகளும் பாலிடெக்னிக்குகளும் ஒரே கூரையின் கீழ் செயல்படவுள்ளன. இதனால், வளர்ந்து வரும்அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, பாடத்திட்டங்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்படும்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, இக்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆய்வகங்களும் நவீன மயமாக்கப்படும்.மேலும், தொழிற்சாலைகளுக்கும் இத்தகைய கல்வி நிறுவனங்களக்கும் இடையே உள்ள தொடர்பைஅதிகப்படுத்தவும் "தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" உதவும் என்றார் தம்பிதுரை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications