பேரணி வன்முறை: ஆளுநரிடமும் வீடியோ கேசட் கொடுத்தது திமுக
சென்னை:
திமுக பேரணியின் போது, திமுக தொண்டர்களை சில ரெளடிகள் அரிவாளால் வெட்டியது உள்பட பல ஆதாரங்கள்அடங்கிய வீடியோ கேசட் தமிழக ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜனிடம் திமுகவினரால் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, 100 இடங்களில்திமுகவினர் கண்டனப் பேரணி நடத்தினார்கள். இறுதியாக சென்னையில் கடந்த 12ம் தேதி நடந்த பேரணியின்முடிவில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தக் கலவரத்தில் ரெளடிகளை ஈடுபடுத்தி திமுகவுனர் மீது தாக்குதல் நடத்த அதிமுகதான் தூண்டியது என்று திமுகதரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில் திமுகவின் வக்கீல்கள் பிரிவினர்நேற்று தமிழக கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், பேரணியின்போது, அதிமுகவினர் ரவுடிகளை வைத்து வேண்டுமென்றே கலவரத்தைத் தூண்டிவிட்டு,திமுக தொண்டர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர் என்பதற்கான வீடியோ ஆதாரத்தைக் கடந்த வாரம் திமுகவெளியிட்டது.
இந்த வீடியோ கேசட்டை நேற்று (திங்கள்கிழமை) மத்திய அரசுக்கு அனுப்பினார் கருணாநிதி. இந்தக் கேசட்டின்மற்றொரு பிரதி, தமிழக ஆளுநரிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. கேசட்டுடன் ஒரு கடிதத்தையும் இணைத்து,ஆளுநரிடம் திமுகவினர் கொடுத்தள்ளனர்.
திமுக வக்கீல் அணியைச் சேர்ந்த மிசா கணேசன், ராதாகிருஷ்ணன், பாரதி, சுப்பிரமணியன் ஆகியோர்கையெழுத்திட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
திமுக பேரணியில் அதிமுகவினர் ரெளடிகளை வைத்து வேண்டுமென்றே கலவரம் ஏற்படுத்தி திமுகவினர் மீதுதாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய போலீசாரும் துணை நின்றுள்ளனர்.
அவர்கள் முன்னிலையில் திமுகவினர் மீது அந்த ரெளடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கான வீடியோஆதாரத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.
மேலும் இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் மீது பொய்வழக்குப்போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு இதுவரை திமுகவினரைத் தாக்கியகுண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போலீசாரே குண்டர்களின் தோழர்களாகச் செயல்பட்டுகலவரத்திற்கு வழிசெய்துள்ளனர்.
எனவே அதிமுக அரசு இனியும் தமிழகத்தில் ஆட்நியில் நீடிக்கும் அதிகாரத்தை இழந்துவிட்டது. தாங்கள் இதுகுறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில்கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications