மீண்டும் சட்டசபையில் திமுக-அதிமுக கடும் மோதல்
சென்னை:
கருணாநிதி கைது விவகாரம் மீண்டும் சட்டசபையில் பிரச்சனையை ஏற்படுத்தியது. செவ்வாய்க்கிழமை அதிமுக-திமுகஉறுப்பினர்கள் வழக்கம் போல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். இதனால், அவையில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதற்கு அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து மோதல் உருவானது. முன்பொரு முறை ஜெயலலிதாவுக்கு எதிராகஇப்போதைய சட்ட அமைச்சர் பொன்னையன் பேசியதை திமுகவினர் நினைவு கூர்ந்தனர். இதை அதிமுகவினர் ஆட்சேபிக்கதிமுகவினர் திருப்பிக் கத்தினர்.
பொன்னையன் திமுகவினரைப் பார்த்துத் திட்டினார். அவருக்கு திமுகவினர் பதில் தந்தனர். இதனால் அவை அமளிதுமளியானது.இரு தரப்பினரையும் அமைதிப்படுத்த முடியாமல் சபாநாயகர் காளிமுத்து திணறினார்.
திமுக எம்.எல்.ஏக்கள் சுவாமிநாதன், ஜே. அன்பழகன் ஆகியோர் தான் இந்தப் பிரச்சனையை முதலில் கிளப்பினர். தமிழகத்தில்நீதியை நிலை நாட்ட வேண்டும் என்றனர்.
ஜே. அன்பழகன் பேசும்போது 1989ம் ஆண்டு சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அடிதடியில் இறங்கியதை சுட்டிக் காட்டி அப்போதுபொன்னையன் தெரிவித்த கருத்தைக் கூறினார்.
இதையடுத்து எழுந்த பொன்னையன் அன்பழகனைப் பார்த்து ஏதோ கடுமையாகக் கூறினார். அதிமுகவினரும் அவருடன் எழுந்துகத்தினர்.
அப்போது இடை மறித்த சபாநாயகர் காளிமுத்து திமுக உறுப்பினர்களின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்.
இந் நிலையில் முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த உறுப்பினருமான கோ.சி. மணி எழுந்து, எதற்கெடுத்தாலும் மொத்தமாக எழுந்துநின்று எங்களைப் பார்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சத்தம் போடுவது வழக்கமாகிவிட்டது என்றார்.
அவருக்கு மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கையில், திமுகவினர் மட்டும் கத்தினால் பதிலுக்கு கத்த எங்களுக்கும்உரிமை உண்டு. கருணாநிதி கைது செய்யப்பட்டபோது கூட வீடியோவில் அய்யோ என்னைக் கொல்றாங்க என்றுகத்தவில்லையா? கத்துவது திமுகவினரின் வழக்கம் தான் என்றார்.
அப்போது பேசிய எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன், அது போலீஸ் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரின் (கருணாநிதி)குரல் என்றார்.
இதன்பின்னர் சமூக நலத்துறை அமைச்சர் எழுந்து திமுகவினரை நோக்கி பேசினார். ஆனால், அன்பழகன் பேசியதோடு இந்தவிவாதம் முடிவடைந்துவிட்டது. இனி யார் பேசினாலும் அதை அவைக் குறிப்பில் ஏற்ற மாட்டேன் என்று கூறி விவகாரத்தைமுடித்து வைத்தார்.
இதன் பின்னர் தான அவையில் இயல்பு நிலை திரும்பியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications