மூப்பனார் தொடர்ந்து கவலைக்கிடம்
சென்னை:
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின்உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.
எலும்பு முறிவு சிகிச்சைக்காக, கடந்த ஜூலை 30ம் தேதி மருத்துவமனையில் மூப்பனார் சேர்க்கப்பட்டார்.ஆபரேஷனைத் தொடர்ந்து, அவர் சிறிது சிறிதாகத் தேறி வந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்குச்சென்று, மூப்பனாரின் உடல் நலத்தை விசாரித்தனர்.
இதற்கிடையே, கடந்த 19ம் தேதி அவருடைய பிறந்த நாளை தமாகாவினர் சிறப்பாகக் கொண்டாடினர். அப்போது,மூப்பனார் விரைந்து குணமடைய வேண்டும் என்பதற்காக, கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனைகளும்நடைபெற்றன. சிறப்பு ரத்ததான முகாம்களும் தமாகா சார்பில் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்திருப்பதாக மருத்துவர்கள்தெரிவித்தனர். இதையடுத்து, அவருக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் அவருடைய உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. பல துறைகளைச்சேர்ந்த மருத்துவர்களும் அடிக்கடி வந்து அவருடைய உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே, தொண்டர் காங்கிரஸ் கட்சித் தலைவர் குமரி அனந்தனும், முன்னாள் திமுக அமைச்சர் ஆலடிஅருணாவும் மருத்துவமனைக்குச் சென்று, மூப்பனாரின் உடல் நிலையை விசாரித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications