Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் சிக்கலில் ஜெ.: டான்சி மேல்முறையீட்டு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டான்சி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு (அப்பீல்) மனுக்கள் மீதானவிசாாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துவிட்டது.

டான்சி வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் தான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. இந்தத் தண்டனையைஎதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனுக்கள் மீதான விவாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற நிலையில் முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. டான்சி வழக்கில் தனக்குவிதிக்கப்பட்ட தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தால் தான் ஜெயலலிதா முதல்வராக நீடிக்க முடியும். அடுத்து தேர்தலிலும் நிற்கமுடியும்.

மேலும், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவை அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி முதல்வராகப் பதவிப் பிரமாணம்செய்து வைத்ததே தவறு என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் விசாரணை வரும் செப்டம்பர்மாதம் 4ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. இவர்கள்ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பளித்தால் அவரது நிலை அதோ கதி தான்.

இதனால், டான்சி வழக்கிலும் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வரும் 4ம் தேதிக்குள் ரத்து செய்ய வைப்பது தான் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்ப அவருக்கு இருந்த ஒரே வழி.

இதனால் தான் டான்சி வழக்கில் தனது அப்பீல் மனுக்களையும் இந்த வழக்கில் தண்டனை பெற்ற பிறரின் அப்பீல் மனுக்களையும் ஒன்றாகவிசாரிக்க வேண்டும் என்று கோரினார். இதில் ஜெயலலிதாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேரின்மனுக்களையும் சேர்த்தே விசாரிக்க தலைமை நீதிபதி ஜெயின் உத்தரவிட்டார்.

(ஜெயினை கர்நாடக நீதிமன்றத்துக்கு மாற்றிய உத்தரவு வந்த பிறகும் கூட அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவான தீர்ப்பை அளித்தார்.ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நீதிபதி ஜெயின் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டதும் நினைவுகூறத்தக்கது.)

பின்னர் இந்த அப்பீல் மனு மீதான விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையும் ஏற்கப்பட்டது.இந்த விசாரணை தினமும் நடக்கும் என இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாலசுப்பிரமணியம் அறிவித்தார். இதனால் ஜெயலலிதாதரப்பில் மகிழ்ச்சி நிலவியது.

உச்ச நீதிமன்றம் தடை

இந் நிலையில் இந்த அப்பீல் மனுக்கள் மீதான எல்லா விசாரணைகளையும் உடனடியாக நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமைஆணையிட்டது.

நீதிமன்றத்தின் இந்தத் தடை ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு எதிரான இந்தத் தீர்ப்பைவழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் சோலி சோப்ராஜி தான் ஜெயலலிதாவுக்கு எதிரான இந்தமனுவைத் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் ஆஜராகும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வெங்கடபதிக்கு நீதிபதி பாலசுப்பிரமணியம் உரியஅவகாசம் தர மறுக்கிறார்.

வழக்கறிஞருக்கு உரிய ஆவணங்கள் கூட நீதிமன்றத்தில் தரப்படுவதில்லை. எனவே, ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்களை உடனடியாகவேறு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். அப்போது தான் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பரூச்சா அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. இந்த பெஞ்ச் அளித்த தீர்ப்பில், ஜெயலலிதாவின்அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை உடனடியாக நிறுத்த சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

நெருங்குகிறது நவம்பர் 14

கடந்த மே மாதம் 14ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெயலலிதா. அவர் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமானால்நவம்பர் 14ம் தேதிக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும். ஆனால், இப்போது உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடை அவரது எதிர்கால அரசியல்திட்டங்களுக்கு வேட்டு வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+