மதுரையில் நர்சிங் கல்லூரி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரையில் நர்சிங் கல்லூரி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செம்மலைநேற்று சட்ட சபையில் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று (புதன்கிழமை) மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்துவருகிறது.

இந்த விவாதத்தின் போது அமைச்சர் செம்மலை பேசியதாவது,

மதுரையில் செவிலியருக்கான நர்சிங் கல்லூரி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.114.8 லட்சம் நிதிஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை பல் மருத்துவமனையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காகரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு, திருநெல்வேலி, குளித்துறை மற்றும் ஓசூர் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளபிணவறைகளில் குறிர்பதன வசதி செய்து தர ரூ. 69.89 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக 3 கோபால்ட் கருவிகளும், 3 மெமோகிராபிகருவிகளும் ரூ.540 லட்சம் செலவில் நிறுவப்படும்.

மூலிகைத் தாவரங்கள் அழிந்து வருவதைத் தடுக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் "மருத்துவத் தாவர வாரியம் "அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+