மனித உரிமை கமிஷன் உறுப்பினாராக முன்னாள் நீதிபதியை நியமித்தது சட்டவிரோதம்:பொன்னையன்
சென்னை:
தனி நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியை மனிதஉரிமை கமிஷன் உறுப்பினராக நியமித்தது சட்டவிரோதமானதுஎன்று தமிழக நிதிஅமைச்சர் பொன்னையன் சட்டசபையில் கூறினார்.
கடந்த திமுக ஆட்சி காலத்தின் போது அமைக்கப்பட்ட 3 தனி நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த ஒரு நீதிபதியின்பெயர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
அதன் பின் அவர் தேர்வாணையக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவர் மனித உரிமைகமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தேர்வாணைய குழு உறுப்பினர் பதவியைராஜினாமா செய்துவிட்டு மனித உரிமை கமிஷன் உறுப்பினாராக பதவி ஏற்றார். இந்த பதவி நீதிபதி பதவிக்குஇணையானது.
அரசியல் சட்டம் 319ம் பிரிவின் (டி)யின் படி ஒருவர் மாநில தேர்வாணையத்திலோ, மத்திய தேர்வாணையத்திலோஉறுப்பினராக நியமிக்கப்பட்டால், அவர் மாநில அரசிலோ அல்லது மத்திய அரசிலோ எந்த பதவியும்வகிக்கக்கூடாது.
சட்டம் இவ்வாறு இருக்க, மாநில் தேர்வவாணத்தில் உறுப்பினராக இருருந்தவர் நீதிபதிக்கு இணையான மனிதஉரிமை கமிஷனர் பதவியில் இருந்து நீக்க அரசு பரிந்துரை செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.
பொன்னையன் பதில்
பாலசுப்ரமணியத்துக்கு பதிலளித்த தமிழக நிதி அமைச்சர் பொன்னையன் பேசும்போது:
இந்த பிரச்சனை குறித்து செவ்வாய்க்கிழமை நான் பதிலளித்துள்ளேன்.
தேர்வாணைய குழு உறுப்பினராக இருந்தவர் மனித உரிமை கமிஷன் உறுபிப்பினராக நியமிக்கப்பட்டது அரசியல்சட்டத்திற்கு முரணானது, சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளேன்.
இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுடன் கலந்து பேசிமுடிவெடுப்பார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications