சென்னையில் பயோ-டெக்னாலஜி பூங்கா: பணிகள் தீவிரம்
சென்னை:
சென்னை தரமணியில் அமைக்கப்பட்டு வரும் பயோ-டெக்னாலஜி பார்க்கின் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இரு மாதங்களில் இந்தப் பூங்கா திறக்கப்பட்டுவிடும் என தொழில்துறை அமைச்சர் வைத்தியலிங்கம்சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது,
தமிழகத்தில் தொழில்துறையை மேம்படுத்தவும், ஏற்றுமதியைப் பெருக்கவும் புதிய தொழிற்கொள்கைகளைஉருவாக்க தமிழக அரசு முயன்று வருகிறது.
இதற்காக வல்லுநர்களைக் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர்இந்தக் கமிட்டியின் தலைவராக இருப்பார்.
இந்தக் கொள்கை ஏற்றுமதியைப் பெருக்கும் விதத்திலும், அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதத்திலும்இருக்கும்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு தமிழ்நாட்டில் உயிர்- தொழில்நுட்பப் பூங்கா(பயோ-டெக்னாலஜி பார்க்) அமைப்பதிலும் அக்கரை காட்டி வருகிறது. இதற்காக தரமணியில் அரசு நிறுவனமான"டிட்கோ" உதவியுடன் இந்தப்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ஆலோசனைகளை அமெரிக்காவில்உள்ள கார்னெல் பல்கலைக்கழகம் வழங்க முன்வந்துள்ளது.
வரும் டிசம்பர் மாதத்தில் இது செயல்படத் துவங்கும்.
மேலும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டுரங்கன் கூறியதாவது,
கடந்த திமுகஆட்சியில் நசுக்கப்பட்ட சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இந்த ஆட்சியில் புத்துயிர் பெரும்.
கடந்த 1996 முதல் 2000 ம் ஆண்டு வரை இந்த நிறுவனங்களில் வளர்ச்சி 6.92 லிருந்து 4.14 ஆக குறைந்து விட்டது.
அதேபோல உற்பத்தியும் 15.66 லிருந்து 10.41 ஆக குறைந்துள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் 19 தொழிற்பேட்டைகள் நிறுவப்பட்டன. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் ஒன்று கூடஉருவாக்கப்படவில்லை. இவ்வாறு பாண்டுரங்கன் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications