ஜெ. பதவி விலக வேண்டும்: சுவாமி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா முதல்வர்பதவியை விட்டு விலக வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி மற்றும் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகள் மீது தாக்கல் செய்யப்பட்டஅப்பீல் மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்தது.இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு வக்கீல் வெங்கடபதிக்கு சாட்சிகளை விசாரிக்கபோதிய கால அவகாசம் தரப்படுவதில்லை என்றும். மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா தமிழகமுதல்வராக இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்தக் கூடாது. வேறு ஏதாவது ஒருமாநிலத்தில் இதை நடத்த வேண்டும் என்று கோரி அரசு வக்கீல் வெங்கடபதி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச், டான்சி மற்றும் பிளசண்ட் ஸ்டேஓட்டல் வழக்குகள் மீதான அப்பீல் மனுக்களை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, முதல்வர்ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அன்றைய தமிழக கவர்னரால் முதல்வராக ஜெயலலிதா பதவி பிரமானம் செய்துவைக்கப்பட்டார்.

இப்போது டான்சி வழக்கி விசாரணையை தொடர்வதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதற்குப் பொறுப்பேற்று ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு சுவாமி தனது அறிக்கையில் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+