பள்ளத்தில் விழுந்த சிறுவனை மீட்க குழுவினர் தொடர்ந்து போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வியாழக்கிழமை மாலை 36 அடி குழியில் விழுந்த 5 வயது சிறுவன் இன்னும்மீட்கப்படவில்லை. இரு இரவுகளை பள்ளத்துக்குள் கழித்துள்ள அவன் உயிருடன்மீட்கப்படுவானா என்பது சந்தேகத்துக்குறியதாகியுள்ளது.

சிறுவனை உயிரோடு மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர், கடலோர காவல்படையினர், போலீசார், ராணுவத்தினர் மற்றும் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள்கடந்த 3 நாட்களாக போராடி வருகின்றனர்.

சென்னை துறைமுகத் தெருவில் வசித்துவரும் குமார், நூர்ஜகான் தம்பதியின் மகன்தமிழ்மணி (வயது 5). இந்த சிறுவன் வியாழக்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீடுதிரும்பும் வழியில், ஆடியபாதம் தெருவில் தோண்டி வைக்கப்பட்டிருந்த 35 அடி ஆழகுழியில் தவறுதலாக விழந்து விட்டான்.

போர்வெல் ஊழியர்களின் அலட்சியம்:

ஆடியபாதம் தெருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்காக போர்வெல் போடும் பணிநடந்து கொண்டிருந்தது. குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், குழியைபேப்பர் போட்டு மூடிவிட்டு சாப்பிட சென்று விட்டனர்.

அந்த பகுதியாக வந்த தமிழ்மணி அந்த பேப்பர் மேல் கால்வைத்தவுடன் பேப்பர்குழிக்குள் விழுந்துவிட்டான். 60 அடி ஆழமான அந்தக் குழியின் விட்டம் ஒன்றரைஅடி கூட இல்லை. 35 வது அடியில் அந்தச் சிறுவன் சிக்கியுள்ளான். கைகைளை மேலேதூக்கியவண்ணம் அந்தப் பிஞ்சு மயங்கிக் கிடக்கிறது.

சிறுவனை மீட்க தீயணைப்பு படையினர் வந்தனர். வெள்ளிகிழமை சிறுவனை மீட்கதீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறுவனை உயிரோடு இருக்கச் செய்ய பிராணவாயு சிறிய குழாய் மூலம் குழிக்குள்செலுத்தப்பட்டது.

சிறுவன் விழுந்து கிடந்த குழிக்கு அருகில் மேலும் ஒரு பள்ளம் தோண்டப்பட்டது இந்தபணி மாலை 3 மணிக்கு முடிவடைந்தது.

சிறுவன் தமிழ் மணி விழுந்த குழிக்கும், அதற்கு அருகில் தோணடப்பட்ட குழிக்கும்இடையில் 8 அடி நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கிய து. எல்அன்டு டி நிறுவனத்தினர் இந்த சுரங்கப்பாதை அமைக்க முன் வந்தனர்.

சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்கும் முன் தீயணைப்பு படை வீரர் சுரேஷ்குமார், ஆட்டோ டிரைவர் அலி ஆகிய இருவரும் பிராண வாயு நிரம்பிய முகமூடியுடன்மீட்பு கிணறுக்குள் இறங்கினர்.

மண் சரியும் அபாயம்:

சரங்கப்பாதை தோண்டினால் மண் சரியும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறியதால்சுரங்கப்பாதை தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

சிறுவனின் நிலையைக் கண்டு பரிதாபமடைந்த இணை போலீஸ் கமிஷ்னர் சைலேந்திரபாபு ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டவராய், மண் சரிந்தாலும் பரவாயில்லைஉயிரை பணயம் வைத்தாவது சிறுவனை நானே மீட்கப் போகிறேன் என்று கூறிஆக்ஸிஜன் முகமூடியுடன் கிணறுக்குள் இறங்கப் போவதாகக் கூறினார்.

அவருடன் மேலும் 3 பேரும் மீட்பு கிணறுக்குள் இறங்க தயாரானார்கள். ஆனால்இந்நிலையில் மழை பெய்யத் தொடங்கியது மழை காரணமாக மீட்பு கிணறுக்குள் மழைதண்ணீர் இறங்கி மண் சரிந்து விழுந்துவிடாமல் இருக்க தார்பாய்கள் கட்டப்பட்டது.மழை 10 நிமிட நேரத்தில் நின்று விட்டது. ஆனாலும் மீட்பு பணி தடைபட்டது.

வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை சுரங்கப்பாதை தோண்டும் பணி தடைபட்டது.மீட்பு பணியினர் சிறவனை உயிரோடு மீட்க முடியுமா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.

உயிருடன் இருப்பானா?

36 மணி நேரத்திற்கும் மேலாக குழிக்குள் சிறுவன் உணவு எதுவும் உட்கொள்ளமுடியாமல் சிறுவன் தவித்துவருகிறான். 36 மணி நேரம்வரை உணவு உட்கொள்ளாமல்உயிரோடு இருக்கலாம். 36 மணி நேரம் தாண்டி விட்ட நிலையில் சிறுவன் உயிரோடுஇருப்பானா என்று மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் சிறுவனை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு அமைச்சர்கள்ஜெயக்குமார், துரைராஜ் மற்றும் எம்.எல்,ஏ. சேகர்பாபு ஆகியோரை சம்பவஇடத்திறஅகு அனுப்பி வைத்துள்ளார்.

அமைச்சர்கள் இருவரும் சிறுவனை உயிரோடு மீட்பது குறித்து அதிகாரிகளுடன்பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிறுவன் விழுந்துள்ள குழி மிகவும் குறுகலாக இருப்பதும், கிணறு தோண்டும் போதுமண் அடிக்கடி சரிந்து விழுந்தால் தான் மீட்பு பணி தாமாதமானது. களிமண்ணாகஇருந்தால் மீட்பு பணி எளிதாக முடிந்திருக்கும் என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதீயணைப்பு வீரர் சுரேஷ் குமார் கூறினார்.

கண்ணீரில் பெற்றோர்:

இரவு 10 மணி வரை சிறுவன் மீட்கப்படாததால் தன் மகனை உயிரோடு பார்ப்போமாஎன்ற தவிப்பில் சிறுவனது பெற்றோர்கள் கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+