த.மா.கா. தலைவராக மூப்பனார் மகன் வாசன் தேர்வு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மறைவையடுத்து, அவரது மகன் கோவிந்தவாசன் அக்கட்சியின்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டத்திற்கு முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான எஸ்,ஆர்,பாலசுப்ரமணியம் தலைமைதாங்கினார். சமீபத்தில் ராஜ்யசபை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஜி.வினாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கட்சியின் பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் கோவிந்தவாசன் த.மா.காவின்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது குறித்து த.மா.கா. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மறைந்த தலைவர்மூப்பனாரின் மறுவார்ப்பான கோவிந்த வாசன் ஒருமனதாக கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுப்பட்டார்.
இதன் மூலம் மறைந்த தலைவர் மூப்பனாரின் லட்சியப் பாதையில் பயணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மூப்பனாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்,காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அனைத்துத் தலைவர்களுக்கும், பிரமுகர்களுக்கும்,தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் த.மா.கா. சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மூப்பனார் மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications