டான்சி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணையைத் தொடரக் கோரும் ஜெ. மனு தள்ளுபடி
டெல்லி:
டான்சி வழக்கு விஷயத்தில், உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடர்ந்துநடத்தக் கோரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது.
இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. ஆனால் அதிமுக அமோக வெற்றிபெற்றதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் தனக்கு தனிநீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை கடந்த 27ம் தேதி ஆரம்பமானது.
3 நாட்களாக நடந்துகொண்டிருந்த இந்த விசாரணையை நிறுத்தக் கோரி அரசு வக்கீல் வெங்கடபதி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
இந்த அப்பீல் வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களையும் தனக்கு வழங்கவில்லை. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருப்பதால், சென்னை உயர் நீதி மன்றத்திலேயே இந்தவழக்கு நடப்பது, மக்கள் மத்தியில் நீதித்துறை மீது சந்தேகத்தை எழுப்பும்.
எனவே, இந்த அப்பீல் வழக்கை வேறு ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேன்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச், டான்சிவழக்கில் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை நறுத்த வேண்டும் என்று இடைக்காலத் தடை விதித்தது.
இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் நேற்று (திங்கள்கிழமை) உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
டான்சி வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று அம்மனுவில்கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், "டான்சி வழக்கில் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைக்கு வழங்கப்பட்ட தடையை எதிர்த்து ஜெயலலிதாதாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வரும் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தில், 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்நடைபெறவுள்ளது.
அதுவரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர்ந்துநடத்த அனுமதி அளிக்க முடியாது" என்று கூறிய நீதிபதி பரூச்சா இம்மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications