மக்கள் தீர்ப்பை ஆளுநர் ஏற்றால் சட்டம் எதற்கு? - நீதிபதிகள் பெஞ்ச்
டெல்லி:
"மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான், ஜெயலலிதாவை, அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி,முதல்வராகப் பதவியில் அமர்த்தினார் என்றால், சட்டங்கள் எல்லாம் எதற்கு?" என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன பெஞ்ச் கேள்விக் கணை எழுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் வேணுகோபால் தன்னுடைய வாதத்தில்,
"தேர்தலில் போட்டியிட முடியாமல் போனாலும், ஜெயலலிதாவின் தலைமையை மக்கள் விரும்பினார்கள். அதன்எதிரொலியாகவே, கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
அதிமுக வெற்றி பெற்றால், ஜெயலலிதாதான் முதல்வர் என்று அறிவிக்கப்பட்டது. அதை மனதில் கொண்டு,மக்களும் தங்களுடைய தீர்ப்பை வழங்கி, அதிமுகவை வெற்றி பெறச் செய்தனர்.
மக்களுடைய இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், அப்போதைய ஆளுநர் ஜெயலலிதாவையேமுதல்வராக்கினார். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்துள்ளார் ஆளுநர். இதில் தவறு ஒன்றும் இல்லை.
மேலும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை இறுதியானது அல்ல. தனி நீதிமன்றத்தின் தீர்ப்பைஎதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார். அது தற்போதும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அவர் தண்டனை பெற்றவர் என்று கூறுவது சரியல்ல. அதனால், இதைக் காரணமாக வைத்துஜெயலலிதா முதல்வர் பதவியைத் தொடரக் கூடாது என்று கூற முடியாது.
தவிர, பதவி ஏற்ற 6 மாதங்கள் வரை ஒருவர் முதல்வர் பதவியிலோ அல்லது மந்திரி பதவியிலோ நீடிப்பதற்குச்சட்டத்தில் இடமுள்ளது.
அப்படி இருக்கும்போது, ஜெயலலிதா பதவி ஏற்று இன்னும் 6 மாதம் ஆகாத நிலையில், அவரைப் பதவியில்இருந்து இறக்க முடியாது" என்று கூறி வாதாடினார் வேணுகோபால்.
அதற்குப் பதிலளித்த நீதிபதிகள் பெஞ்ச், "மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்துதான் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்றால், நாட்டில் சட்டங்கள் எதற்கு உள்ளன?" என்று கூறியது.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. ஜெயலலிதா தரப்பிலான வாதத்தை வேணுகோபால் நாளையும்தொடர்வார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நீதிபதிகள் பெஞ்ச் கேட்ட கேள்விகளுக்கு, அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி அடுத்தசெவ்வாய்க்கிழமைதான் பதில் அளிப்பார் என்று தெரிகிறது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications