ஜெ.மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரும் சுயேச்சை எம்.எல்.ஏ.
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்குகளை ரத்து செய்வதோடு, தனிக்கோர்ட்டுகளையும் கலைத்துவிட்டு, அவரேஆட்சியைத் தொடர சட்டசபை வழிவகுக்க வேண்டும் என்று ராதாபுரம் தொகுதி சுயேச்சை உறுப்பினர் அப்பாவுசட்டசபையில் கூறினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி 2 விதமாக செயல்படுபவர்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள அரசுக்குச் சொந்தமானநிலத்தை அப்போது கலெக்டராக இருந்த ஒருவர் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். இதையடுத்து அந்தக்கலெக்டர் மீது எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுத்தார்.
ஆனால் கடந்த 1989ம் ஆண்டு முதல்வரான கருணாநிதி, தான் பதவியேற்றவுடன், அதே கலெக்டருக்கு மீண்டும்பதவி கொடுத்துப் பணியில் அமர்த்தினார்.
டான்சி நில விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா மீது பல வழக்குகளைப் போட்டு,அவற்றை விசாரிக்கத் தனிநீதி மன்றமும் ஏற்படுத்தியவரும் கருணாநிதிதான். இதன் மூலம் அவருடைய இரட்டைவேடம் பொதுமக்களுக்கு நன்கு விளங்கும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா பொமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெரும்வெற்றியைப் பெற்றுள்ளார். ஆனால் சட்டம் அவரை பதவியில் நீடிப்பதை எதிர்க்கிறது.
எனவே, ஜெயலலிதா மீது போடப்பட்டுள்ள ஜோடிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சட்டசபை ரத்து செய்யவேண்டும். மேலும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றங்கள் அனைத்தையும் கலைக்க வேண்டும்.இதற்கான அதிகாரம் சட்டசபைக்கு உண்டு.
முன்பு ஒருமுறை பி.எச்.பாண்டியன் சபாநாயகராக இருந்த போது, அன்பழகன் உள்ளிட்ட எதிர்கட்சியினர் சட்டநகலை எரித்தார்கள். உடனே, அவர்களின் உறுப்பினர் பதவியை பறித்து அவர்களை அனுப்பி வைத்தார்பாண்டியன். ஆனால், அவர்கள் தற்போது தேர்தலில் நின்று எம்.எல்.ஏ ஆகியுள்ளனர்.
மேலும், சென்ற மாதம் கொலை செய்யப்பட்ட பூலான் தேவி மீதிருந்த வழக்குகள் எல்லாவற்றையும், அன்றையபிரதமர் வி.பி. சிங் ரத்து செய்து, தேர்தலில் நிற்க வகை செய்தார்.
மக்கள் ஆதரவைப் பெற்றவர்கள்தான் நாட்டை ஆளவேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. எனவேஇதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அப்பாவு எம்.எல்.ஏ. பேசினார். தற்போது சுயேச்சை உறுப்பினராக இருந்தாலும், இவர் முன்னாள் தமாகாஉறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications