சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி பி. சுபாஷண்ரெட்டி (58) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சனிக்கிழமைபிற்பபித்தார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், டான்சி நில பேர ஊழல் வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல்செய்திருந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை வேறு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று அரசுசிறப்பு வழக்கறிஞர் வெங்கடபதி தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீதான அப்பீல்மனுவுக்கு இடைக்கால தடை விதித்தது.
டான்சி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அப்பீல் மனுமீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி ஜெயலலிதாதரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை தற்போது விசாரித்துவரும்பாலசுப்ரமணியத்திற்கு பதிலாக வேறு ஒரு நீதிபதி விசாரிப்பார் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்துக்குப்புதிதாகப் பதவியேற்கவிருக்கும் தலைமை நீதிபதிதான் இந்த நீதிபதியைத் தேர்வு செய்வார் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆந்திர நீதிபதி சுபாஷன் ரெட்டி தற்போதுநியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பவர் என்ற பெயர் பெற்றவர்.
ஜனாதிபதியின் முறைப்படியான உத்தரவு திங்கள்கிழமை இவருக்கு அளிக்கப்படும். வரும் வியாழக்கிழமைஅல்லது வெள்ளிக்கிழமை சுபாஷன் ரெட்டி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் வந்துதான் டான்சி நில பேர ஊழல் தொடர்பான ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை விசாரிக்க புதியநீதிபதியை நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications