கருணாநிதி கைது சம்பவம்: ராமன் கமிஷன் முன் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம்
சென்னை:
நீதிபதி ராமன் கமிஷன் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது சம்பவத்தில் தொடர்புடையபோலீஸ்அதிகாரிகள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
நீதிபதி ராமன் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணையை ஆரம்பித்து நடத்தி வருகிறது. இந்நிலையில்நேற்று (திங்கள்கிழமை) கைது சம்பவத்தில் தொடர்புடைய 21 போலீஸ் அதிகாரிகள் அவர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
அவர்களில் மத்திய சென்னை இணை கமிஷனரும், மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டவருமான ஜார்ஜ்குறிப்பிடத் தக்கவர். மேலும், துணைக் கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், பிரபாகரன், சமுத்திர பாண்டிஆகியோரும், உதவிக்கமிஷனர்கள் 3 பேரும், 10 இன்ஸ்பெக்டர்களும் நீதிபதி முன் ஆஜரானார்கள்.
அப்போது அவர்கள் அனைவரும் அளித்த வாக்கு மூலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது விதிமுறைகள் மீறப்படவில்லை என்றார்கள். மேலும், உச்ச நீதிமன்ற விதிமுறைகளுக்கு ஏற்றவாறுதான்கருணாநிதி கைது சம்பவத்தில் நடந்து கொண்டோம் என்றும் போலீ"ஸ் அதிகாரிகள் வாக்குமூலத்தில்தெரிவித்தனர்.
பின்னர் கருணாநிதி கைது செய்ப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் உள்ளிட்ட கோப்புகளைகமிஷன் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று கைது சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 60போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications