கர்நாடக முதல்வரிடம் பேசுகிறார் வாஜ்பாய்
டெல்லி:
தமிழகத்துக்கு காவிரி நதி நீர் வழங்குவது பற்றி கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம் பேசுவதாக பிரதமர் வாஜ்பாய்உறுதி அளித்துள்ளார்.
அந்த ஆணையத்தின் தீர்ப்புப்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர்திறந்துவிட வேண்டும். ஆனால் ஒரு ஆண்டு கூட கர்நாடகத்திலிருந்து இந்த அளவு தண்ணீர்திறந்துவிடப்பட்டதில்லை. இந்த ஆண்டும் வெறும் 51.11டி.எம்.சி. தண்ணீர்தான் திறந்துவிடப்பட்டிருக்கிறது.
இதனால் தமிழகத்தில் காவிரி நீர் பாயும், தஞ்சை, நாகை, திருச்சி போன்ற மாவட்டங்களில் உள்ள குறுவைபயிர்கள் கறுகிவிடும் அபாயம் எழுந்துள்ளது. இந்த அபாயத்திலிருந்து விவசாயிகளை காக்க எப்படியாவது,காவிரி நீரைப் பெற வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்தது.
இதையடுத்து காவிரி நதி நீர் ஆணைத்தின் கூட்டத்தைக் கூட்ட, அதன் தலைவரான பிரதமரைக் கேட்டுக்கொண்டது.அதைத்தொடர்ந்து, கடந்த 6ம் தேதி கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதைத்தொடர்ந்து தமிழத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இதற்கு அனைவரின் கருத்துக்கள்கேட்கப்பட்டது. பிறகு அனைத்துக் கட்சியினரும் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது என்று முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி நேற்று (திங்கள் கிழமை) மாலை பிரதமரைச் சந்தித்து தமிழகத்திற்கு வழங்கவேண்டிய காவிரி நீரைவழங்குமாறு, கர்நாடக அரசிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்அதை ஏற்று, இதுகுறித்து கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம் பேசுவதாக உறுதி அளித்துள்ளார்.
பிறகு அனைத்துக்கட்சியினரும் கூடி, எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியாகாந்தியையும் சந்திக்க வேண்டும் என்று முடிவுசெய்தனர்.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தங்கள் கட்சித் தலைவி சோனியா காந்தி சொன்னால் கேட்பார் என்று கருதி,சோனியாவிடமும் தமிழகத்தில் வாடும் பயிர்களின் நிலைமை பற்றி எடுத்துரைக்க முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை அனைத்துக் கட்சிக் குழுவினர் சோனியா காந்தியைச் சந்திக்கிறார்கள்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications