வெளி மாநிலங்களுக்கு நெல், அரிசி அனுப்ப இனி தடை இல்லை
சென்னை:
தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு நெல் மற்றும் அரிசி ஆகியவை அனுப்பப்படுவதற்குவிதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு முழுமையாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு நெல் மற்றும் அரிசி அனுப்பப்படுவது கடந்த 25ஆண்டுகளாகத் தடைசெய்யப்பட்டிருந்தது.
பெரும்பாலான விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்தத் தடையை நீக்க அமைச்சரவைக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்தத் தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
சட்டவிரோதமாக நெல் கடத்தப்படுவதைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் "செக் போஸ்ட்" அமைக்கப்பட்டு,அதில் போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.
இப்போது இந்தத் தடையை அரசு நீக்கி இருப்பதால், அதுபோன்ற செக் போஸ்ட்டுகள் அனைத்தும் இனிசெயல்படாது. மேலும், அங்கு பணியாற்றி வந்த காவலர்கள் மற்றும் அதிகாரிகள், தாங்கள் முன்பு வேலை செய்ததுறைகளுக்கே மீண்டும் அனுப்பப்படுவார்கள்.
இதன் மூலம், வியாபாரிகளும், அரசின் குடிமைப்பொருள் வழங்கல் கழகமும் விவசாயிகளிடமிருந்து நெல்லைநேரடியாக கொள்முதல் செய்ய வகைசெய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச விலை ரூ.530 என நிர்ணயித்துள்ளது. இந்த விலையைவிட ரூ.40 அதிகமாகக் கொடுத்து விவசாயிகளிடமிருந்து தமிழக அரசு நெல்லைக் கொள்முதல் செய்யும்.
தமிழக அரசின் இந்த நேரடி நெல் கொள்முதல் திட்டம் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றுஜெயலலிதா கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications