கத்திகளைக் காட்டி விமானங்களைக் கடத்திய தீவிரவாதிகள்
நியூயார்க்:
அமெரிக்காவில் 4 விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள், பைலட்டுகளிடம் கத்திகளைக்காட்டி, மிரட்டிதான் விமானங்களைக் கடத்தியாதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரும் கத்தி வைத்திருந்ததாக அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் 2 பேரும், மேலும்ஒரு விமானப்பணிப் பெண்ணும் தெரிவித்துள்ளனர்.
கடத்தல்காரர்கள் கத்திகளைக் காட்டி, விமானத்தைக் கடத்தியுள்ளதாக அறிவித்தவுடன், இவர்கள் தங்களிடமிருந்தசெல் போனில் தங்கள் உறவினர்களிடம் பேசியுள்ளனர்.
இந்த 3 பேரும் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகளிடமும் பேசியுள்ளனர். "கடத்தல்காரர்கள் அனைவரும்கத்திகளைக் காட்டி மிரட்டி, எங்களை விமானத்தின் பின் பகுதிக்குப் போகச் சொன்னார்கள். சில பயணிகளைக்கத்தியாலும் குத்தினர்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் விமானப்பயணிகளிடமிருந்து வந்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இந்தக் கடத்ததலில்சர்வதேசத் தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
பென்சில்வேனியாவில் விழுந்த யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி, இறப்பதற்குச்சற்று முன் அவரது தாயிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 3 பேர் விமானத்தைக் கடத்தியுள்ளனர்.அவர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கத்திவைத்திருக்கிறார்கள்" என்றார்.
எனவே அந்த 4-வது விமானம் வெடிகுண்டு வெடித்ததால் வெடித்துச் சிதறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த மார்க் பிங்காம் என்ற மக்கள் தொடர்பு அதிகாரி, யுனைட்டெட்ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவரும் அவரது தாயிடம் பேசினார். அவர்பேசும் போது போனில் பயங்கரக் கூச்சலும் குழப்பமும், சத்தமும் கேட்டதாகவும், பின்னர் தொடர்புதுண்டிக்கப்பட்டதாகவும் கூறினார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications