கோலாலம்பூர் கட்டிடத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்
கோலாலம்பூர்:
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உலகிலேயே மிகஉயரமான கட்டிடத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் போன் வந்துள்ளது.
88 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடம் இரட்டைக் கட்டடங்களைக் கொண்டது. இவற்றின் உயரம் 452 மீட்டர்.இரட்டைக் கட்டிடங்களில் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டள்ளது என்று அந்த தொலைபேசி மிரட்டல் வந்தது.அமெரிக்காவில் வெடிகுண்டு வெடித்த சில மணி நேரத்தில் இந்த மிரட்டல் வந்தது.
வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அந்தக் கட்டிடங்களை 2 மணி நேரம் போலீசார் கடுமையாக சோதனைபோட்டார்கள்.
கோலாலம்பூர் நகர போலீஸ் அதிகாரி முகமது பக்ரி இதுபற்றிக் கூறுகையில், கட்டிடங்களை முழுமையாகச்சோதனை செய்த பிறகு எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்தோம்.
அதன் பின்புதான் அந்தக் கட்டிடத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் கடைக்காரர்களை உள்ளே செல்லஅனுமதித்தோம் என்றார்.
மேலும் இந்த கோலாலம்பூர் இரட்டைக் கட்டிடம் மாண்டரி என்ற ஓட்டலுக்கு அருகே இருக்கிறது. அங்கு தான்கடந்த வாரம் முதல் அமெரிக்க ராணுவ அதிகாரிகளின் மாநாடு நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியா வந்திருந்த அமெரிக்க ராணுவத் தலைமை அதிகாரி எரிக் சின்ஸ்கி,தாக்குதல் பற்றிக் கேள்விப் பட்டதும் உடனே அமெரிக்காவிற்குத் திரும்பி விட்டார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications