சோனியா எம்.பி. ஆனதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் அமேதி தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுப்பட்டதை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தள்ளுபடி செய்தது.
"சோனியா காந்தி தக்க சமயத்தில் இந்திய குடியுரிமை பெறவிவ்லை. அவர் இந்திய குடியுரிமை பெற்ற நேரம்குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதால், அவர் எம்.பியாகத் தேர்ந்தெடுகக்ப்பட்டது செல்லாது" என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை உச்ச நீதமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ் ஆனந்த், நீதிபதி ஆர்.சி. லகோதி, நீதிபதி துரைசாமி ராஜுஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது.
"இவ்வழக்கில் சோனியாவுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் தெளிவாக இல்லை. மேம்போக்காக இருக்கிறது"என்று கூறிய நீதிபதிகள் இம்மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications