தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு உதவுவோம் - வாஜ்பாய்
டெல்லி:
அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குபிரதமர் வாஜ்பாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளின் இந்த வெறுக்கத்தக்க செயலுக்கு இந்தியஅரசும் மக்களும் வருந்துவதாக அமெரிக்க அதிபர் புஷ்ஷூக்கு செய்தி அனுப்புள்ளார்.
இந்தத் தாக்குதலில் உலக வர்த்தக மையம் செயல்பட்டு வந்த 110 மாடிகளைக் கொண்ட இரட்டைக் கட்டிடங்கள்நொறுங்கி விழுந்து தரைமட்டமாக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பு எது என்று இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் வாஜ்பாய், அமெரிக்க அதிபருக்கு கண்டனச் செய்தி அனுப்பியுள்ளார். அதில்கூறியிருப்பதாவது:
தீவிரவாதிகளின் வெறுக்கத்தக்க செயலுக்கு இந்தியப் பொதுமக்களும் எங்களது அரசும் மிகவும் வருந்துகிறோம்.தாக்குதலில் தங்கள் உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களின் துக்கத்திலும் மற்றும் அமெரிக்க மக்களின்துக்கத்திலும் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.
அதிபராகிய நீங்களும், அமெரிக்க மக்களும் இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு, அதிலிருந்து விரைவில்மீள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தத் துக்கமான நேரம், ஒன்றுமறியாத அப்பாவி மக்களைக் கொன்றுகுவிக்கும் தீவிரவாதிகளின் பலத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
நம்மைப் போன்ற ஜனநாயக நாடுகளின் மக்களைக் காக்க, நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு, இதுபோன்றகொடுஞ்செயல்களை ஒடுக்க வேண்டும் என்ற செய்தியை இந்தத் தாக்குதல் நமக்கு விளங்க வைக்கிறது.
இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைக் கண்டறிய, நீங்கள் நடத்தும் விசாரணைகளுக்கும், அவர்களைவேரோடு அழிக்க நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், இந்திய அரசும், எங்கள் நாட்டு மக்களும் உங்களுக்குஉறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார் வாஜ்பாய்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications